வருங்கால முதலமைச்சரே! சிவகார்த்திகேயன் கொடுத்த ரியாக்ஷன்


சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் இன்று தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர். இவர் நடிப்பில் கடைசியாக வந்த பராசக்தி படம் எதிர்பார்த்த அளவிற்கு பெரிய வெற்றியை பெறவில்லை.

வருங்கால முதலமைச்சரே! சிவகார்த்திகேயன் கொடுத்த ரியாக்ஷன் | Sivakarthikeyan Reaction For Fans Chant

இதனால் இனி தான் நடிக்கும் படங்கள் முறையான மசாலா ரசிகர்களுக்கு விருந்தாக இருக்க வேண்டும் என தாய்கிழவி இயக்குநருடன் சேயோன் படத்தில் சிவகார்த்திகேயன் கைக்கோர்த்துள்ளார். இப்படத்தை கமல்ஹாசன் தயாரித்து வருகிறார், இந்த படத்தின் 80% படப்பிடிப்பு முடிய, படம் பொங்கல் விருந்தாக திரைக்கு வரவுள்ளது.

வருங்கால முதலமைச்சரே!


இந்நிலையில் சமீபத்தில் சிவகார்த்திகேயன் தன் ரசிகர்கள் சந்திப்பு நிகழ்வு ஒன்றை நடத்தினார். அதில் அவர் பேசும் போது ரசிகர்கள் அனைவரும் ‘வருங்கால முதல்வர் SK’ என கூச்சலிட, சிவகார்த்திகேயன் உடனே தன் கையை காட்டி அப்படியெல்லாம் சொல்ல வேண்டாம் என அன்பாக செய்கை மூலம் கோரிக்கை வைத்துள்ளார்.

வருங்கால முதலமைச்சரே! சிவகார்த்திகேயன் கொடுத்த ரியாக்ஷன் | Sivakarthikeyan Reaction For Fans Chant

சமீப காலமாக எந்த நடிகரின் ரசிகர்கள் சந்திப்பு நடந்தாலும் இப்படியொரு கூச்சல் வந்துகொண்டே இருப்பது குறிப்பிடத்தக்கது.


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *