Brand New Day, Odyssey இரண்டு படங்களின் இறுதி வசூல்..
ஸ்பைடர் மேன்
ஹாலிவுட் படங்களுக்கு இந்தியாவில் எப்போதும் மிகப்பெரிய மார்க்கெட் இருக்கும். அந்த வகையில் சூப்பர் ஹீரோ படங்களுக்கு நாங்கள் சொல்லி தெரிய வேண்டிய அவசியமில்லை. அதிலும் மார்வல் காமிக்ஸ் ஸ்பைடர் மேன் சீரிஸுக்கு இந்தியாவில் மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது.
அந்த வகையில், ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே படம் இந்தியாவில் மட்டுமே ரூ. 650 கோடிகள் வசூல் செய்து இந்தியாவில் அதிகம் வசூல் செய்த ஹாலிவுட் படங்கள் லிஸ்டில் நம்பர் 1 இடத்தில் உள்ளது. இத்தகைய சாதனையை அவெஞ்சர்ஸ் தூம்ஸ் டே படம் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒடிசி
சூப்பர் ஹீரோ படங்களுக்கு எப்படி ஒரு எதிர்பார்ப்பு இருக்குமோ, அதே எதிர்பார்ப்பு கிறிஸ்டோபர் நோலன் என்ற இயக்குனருக்கு இந்தியாவில் உண்டு, அவர் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் வெளிவந்த ஒடிசி படம் இந்தியாவில் மட்டுமே ரூ. 250 கோடி வசூல் செய்து மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.
கண்டிப்பாக எந்த ஒரு சீக்குவள், சூப்பர் ஹீரோ கான்செப்ட் இல்லாமல் இத்தகைய வசூல் பிரமிக்க வைத்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் நோலனின் புகழ் என்ன என்பதை அறிந்துகொள்ளலாம்.
