இரண்டு வாரங்கள் கடந்தும் வெற்றி நடை போட்டு வரும் 'மொத ராத்திரி' திரைப்படம்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரம் இதோ


கடந்த ஆகஸ்ட் 21-ஆம் தேதி வெளியான ‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

மொத ராத்திரி

வித்தியாசமான கதைக்களத்தில் வெளிவந்து அனைவரின் கவனத்தையும் சமீபத்தில் ஈர்த்த திரைப்படம் ‘மொத ராத்திரி’. இப்படத்தை அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி இயக்கியுள்ளார்.

இப்படத்தில் ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார், வெங்கடேஷ், சேத்தன், அப்துல் ஆகியோர் நடித்துள்ளனர். சுவாரஸ்யமான திரைக்கதை, நகைச்சுவை மற்றும் எமோஷனல் காட்சிகள் என இப்படம் ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது.

பாக்ஸ் ஆபிஸ்

விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வரவேற்பை பெற்றுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படம், இதுவரை 11 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ளது.

இந்நிலையில், உலகளவில் 11 நாட்களில் இப்படம் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, ‘மொத ராத்திரி’ திரைப்படம் 11 நாட்களில் உலகளவில் ரூ. 4.5 கோடி வசூல் செய்துள்ளது. இது இப்படத்திற்கு பாக்ஸ் ஆபிஸில் கிடைத்துள்ள குட் பிக்கப் ஆகும். இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *