6 நாட்களில் டாக்சிக் திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்..


கே.ஜி.எப் 2 வெற்றியை தொடர்ந்து யஷ் நடிப்பில் வெளிவந்த டாக்சிக் திரைப்படத்தின் 6 நாட்கள் வசூல் எவ்வளவு என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

டாக்சிக்



கே.ஜி.எப் திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் திரும்பி பார்க்க வைத்தவர் நடிகர் யஷ். இதை தொடர்ந்து கே.ஜி.எப் 2 மாபெரும் வெற்றி பெற்ற நிலையில், அவர் பான்-இந்தியன் ஸ்டாராக உயர்ந்தார்.

பாக்ஸ் ஆபிஸ்: 6 நாட்களில் டாக்சிக் திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்.. முழு விவரம் | Toxic Movie 6 Days Worldwide Box Office



இவ்வளவு பெரிய வெற்றிக்கு பின் இவர் யாருடைய இயக்கத்தில் அடுத்த படம் நடிக்கப் போகிறார் என்கிற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், இயக்குநர் கீது மோகன்தாஸின் இயக்கத்தில் டாக்சிக் படத்தில் நடிக்கிறார் எனும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. நடிப்பை தாண்டி இயக்குநர் கீதுடன் இணைந்து இப்படத்திற்கு திரைக்கதையையும் யஷ் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாக்ஸ் ஆபிஸ்: 6 நாட்களில் டாக்சிக் திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்.. முழு விவரம் | Toxic Movie 6 Days Worldwide Box Office



இப்படத்தில் யஷ் உடன் இணைந்து நயன்தாரா, ஹுமா குரேஷி, ருக்மிணி வசந்த், கியாரா அத்வானி, தாரா சுதாரியா என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த டாக்சிக் திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்துள்ளது. இதனால் பாக்ஸ் ஆபிஸில் எதிர்பார்த்த வசூலையும் இப்படத்தால் எட்ட முடியவில்லை.


வசூல் விவரம்


கடந்த வாரம் புதன்கிழமை அன்று வெளிவந்த டாக்சிக் திரைப்படம் முதல் நாள் உலகளவில் ரூ. 150 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. இது இப்படத்திற்கு கிடைத்த மாபெரும் ஓப்பனிங் நாள் வசூல் என கூறினாலும், அடுத்தடுத்த நாட்களில் பாக்ஸ் ஆபிஸில் தடுமாறி கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

பாக்ஸ் ஆபிஸ்: 6 நாட்களில் டாக்சிக் திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்.. முழு விவரம் | Toxic Movie 6 Days Worldwide Box Office


டாக்சிக் திரைப்படம் வெளியாகி 6 நாட்கள் கடந்துள்ள நிலையில், இதுவரை இப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 6 நாட்களில் உலகளவில் இப்படம் ரூ. 290 கோடி வசூல் செய்துள்ளது. இதன் மூலம் பாக்ஸ் ஆபிஸில் டாக்சிக் டிசாஸ்டர் ஆகியுள்ளது.


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *