ஜீ தமிழில் ஹிட்டாக ஓடும் சீரியல் முடிவுக்கு வரப்போகிறது… எந்த தொடர் தெரியுமா?


ஜீ தமிழ்

இந்தியாவில் உலகம் முழுவதும் பல மொழிகளில் தரமான பொழுதுபோக்கு விஷயங்களை ஒளிபரப்பும் முன்னணி ஊடகங்களில் ஒன்றாக உள்ளது ஜீ தமிழ்.


சீரியல்கள் மூலம் சன் டிவியும், ரியாலிட்டி ஷோக்கள் மூலம் விஜய் டிவியும் கெத்து காட்டிவரும் நிலையில் ஜீ தமிழ் இரண்டிலும் கலக்க துவங்கியது.
சரிகமப, டான்ஸ் ஜோடி டான்ஸ் போன்ற நிகழ்ச்சிகள் எல்லாம் மக்களிடம் செம பேமஸ்.

அதேபோல் கார்த்திகை தீபம், வீரா, இதயம் 2, திருமாங்கல்யம், சின்னஞ்சிறு கிளியே என நிறைய சீரியல்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.

ஜீ தமிழில் ஹிட்டாக ஓடும் சீரியல் முடிவுக்கு வரப்போகிறது... எந்த தொடர் தெரியுமா? | Zee Tamizh Hit Serial Coming To An End Soon

கிளைமேக்ஸ்


தற்போது ஹிட்டாக ஒளிபரப்பாகி வரும் ஒரு சீரியல் முடிவுக்கு வரப்போகும் செய்தி வெளியாகியுள்ளது.

அதாவது கடந்த 2024ம் ஆண்டு வைஷ்ணவி மற்றும் அருண் புதிய ஜோடி இணைய வீரா என்ற சீரியல் ஒளிபரப்பாகி வந்தது.
இந்த ஜோடிக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது.

முதல் பாகம் முடிவடைந்து இரண்டாம் பாகம் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்தது. விரைவில் வீரா சீரியல் முடிவுக்கு வரப்போவதாக தகவல்கள் வெளியாக ரசிகர்கள் வருத்தப்படுகின்றனர்.




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *