பிக்பாஸ் 10ல் சின்ன மருமகள், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர்கள்… யாரெல்லாம் பாருங்க
பிக்பாஸ் 10
சின்னத்திரை, ஒட்டுமொத்த சினிமா ரசிகர்கள் அதிகம் பார்க்கும் ஒரு இடமாக உள்ளது. படங்கள் வாரா வாரம் தான் வருகிறது, ஆனால் சின்னத்திரையில் எப்போதுமே பொழுதுபோக்கு விஷயங்கள் உள்ளது.
அப்படி விரைவில் மக்கள் 100 நாட்கள் ஆர்வமுடன் பார்க்கும் வகையில் நாம் எல்லோரும் எதிர்ப்பார்த்த பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்க உள்ளது. பிக்பாஸ் 10வது சீசன் வரும் செப்டம்பர் 6ம் தேதி மாலை 6 மணி முதல் தொடங்க உள்ளது.
ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்திலும், விஜய் தொலைக்காட்சியிலும் ஒரே நேரத்தில் ஒளிபரப்பாகிறது.
இம்முறை பிரபலங்களை தாண்டி பொதுமக்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட போட்டியாளர்களும் கலந்துகொள்ள உள்ளார்கள்.
போட்டியாளர்கள்
நிகழ்ச்சி விரைவில் தொடங்கவுள்ள நிலையில் வழக்கம் போல் போட்டியாளர்களின் லிஸ்ட் என பல வலம் வருகிறது. பிக்பாஸ் குழுவும் போட்டியாளர்கள் யார் என்று தெரியாத அளவிற்கு அவர்களின் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.
தற்போது பிக்பாஸ் 10வது சீசனில் கலந்துகொள்ள போகும் சில போட்டியாளர்களின் விவரம் வெளியாகியுள்ளது, அதில் விஜய் டிவி சீரியல் நடிகர்கள் உள்ளனர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனா கதாபாத்திரத்தில் நடிக்கும் ஹேமா, சின்ன மருமகள் சீரியல் நாயகன் நவீன், பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்க அக்ஷிதா ஆகியோர் கலந்துகொள்கிறார்கள் எனப்படுகிறது.
