உலக அளவிலும் தமிழ்நாட்டிலும் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்
சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் உலக அளவிலும் தமிழ்நாட்டிலும் இதுவரை செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
விஸ்வநாத் & சன்ஸ்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான கருப்பு திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதை நாம் அனைவரும் அறிவோம். சூர்யாவின் திரை வாழ்க்கையில் அதிக வசூல் செய்த திரைப்படமும் இதுவே ஆகும்.
கருப்பு வெற்றியை தொடர்ந்து மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதி வெளியான திரைப்படம் விஸ்வநாத் & சன்ஸ். வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி வெளிவந்த இப்படத்திற்கு சற்று கலவையான விமர்சனங்கள் கிடைத்தன. இருந்தும் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை ஈட்டி வருகிறது.
பாக்ஸ் ஆபிஸ்
இந்நிலையில், விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் இதுவரை உலக அளவிலும், தமிழ்நாட்டிலும் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் இதுவரை ரூ. 192 கோடி வசூல் செய்துள்ளது. மேலும், தமிழ்நாட்டில் ரூ. 54 கோடி வசூலித்துள்ளது.
இனி வரும் நாட்களில் இப்படம் எவ்வளவு வசூல் செய்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
