அதை பற்றி பேசும் தகுதி இல்லை; அனுபமா
அனுபமா – துருவ்
தமிழ் சினிமாவில் கடந்த சில நாட்களாக வெடித்த மிகப்பெரிய பிரச்சனை அனுபமாவின் காதல் தோல்வி தான்.
அனுபமா தான் மிகப்பெரிய டாக்சிக் உறவில் இருந்ததாகவும், அதனால் பல கஷ்டங்களை அனுபவித்ததாகவும், தன் காதலன் ஒரு நேரம் அம்பி மற்றொரு நேரம் அந்நியன் போலவும் நடந்துகொள்கிறார் என கூறினார்.
இதை தொடர்ந்து பலரும் இவர் துருவ்-வைதான் சொல்கிறார் என சொன்னாலும், அனுபமா வெளிப்படையாக இவர் தான் என கூறவில்லை.
நடிகர் பகவதி
இந்நிலையில் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், துணிவு போன்ற படங்களில் நடித்த பகவதி அவர்களிடம் இதுகுறித்து கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பகவதி, “எனக்கு அனுபமா, துருவ் விஷயத்தில் ஏதோ ஒரு பிரச்சனை உள்ளது என தெரிகிறது; ஆனால், அதில் கருத்து சொல்ல எனக்கு தகுதியில்லை” என வெளிப்படையாகவே சொல்லி அந்த கேள்வியை பக்ஸ் கடந்து சென்றுள்ளார்.
