Magudam 3 days box office collection

மகுடம் வசூல்
விஷால் நடித்து இயக்கிய மகுடம் படம் கடந்த வாரம் திரைக்கு வந்தது.
இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரிய எதிர்பார்ப்பு ஏதுமில்லை. ஏனெனில் இந்த படத்தின் பாடல்கள், ட்ரைலட் என எதுவுமே ரசிகர்களை கவரவில்லை. இந்நிலையில் படத்தின் திரைக்கதை நன்றாக இருந்தால் போதுமே, வேறெல்லாம் எதற்கு என ரசிகர்கள் நினைத்த நிலையில் படமும் மிக மோசமான விமர்சனங்களை பெற்றது.
இந்த படம் முதல் நாள் ஒரு கோடி கூட வசூல் வராத நிலையில், தற்போது 3 நாள் முடிவில் ரூ 2 கோடி வரை தான் இந்த படம் வசூல் வந்திருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதன் மூலம் விஷால் திரைப்பயணத்தில் இதுவரை வந்த படங்களில் மிக மோசமான வசூல் மற்றும் தோல்வி என்றால் அது மகுடம் படமாக தான் இருக்கும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்களில் கூறப்படுகிறது.






