விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தில் நடிக்க சூர்யா மற்றும் மமிதா பைஜூ வாங்கிய சம்பளம்..

விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தில் நடிக்க சூர்யா மற்றும் மமிதா பைஜூ வாங்கிய சம்பளம்..

வருகிற 14-ஆம் தேதி வெளியாகவிருக்கும் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தில் நடிப்பதற்காக சூர்யா மற்றும் மமிதா பைஜூ வாங்கிய சம்பளம் எவ்வளவு என்று தெரியுமா? வாங்க இந்த பதிவில் பார்க்கலாம்.

விஸ்வநாத் & சன்ஸ்

லக்கி பாஸ்கர் திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விஸ்வநாத் & சன்ஸ். இப்படத்தில் சூர்யா கதாநாயகனாக நடிக்க, மமிதா பைஜூ கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து ரவீனா டாண்டன், ராதிகா சரத்குமார் நடித்துள்ளனர்.

விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தில் நடிக்க சூர்யா மற்றும் மமிதா பைஜூ வாங்கிய சம்பளம்.. | Suriya Mamitha Baiju Salary Vishwanath And Sons

ஜி.வி. பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இப்படத்திலிருந்து இதுவரை வெளிவந்த பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக ‘பட்டாம்பூச்சி’ எனும் பாடல் உலகளவில் டிரெண்ட் ஆனது.

விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தில் நடிக்க சூர்யா மற்றும் மமிதா பைஜூ வாங்கிய சம்பளம்.. | Suriya Mamitha Baiju Salary Vishwanath And Sons

மேலும், சமீபத்தில் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் ‘தி ஒன்’ என்கிற பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. ஆகஸ்ட் 14-ஆம் தேதி வெளியாகவிருக்கும் இப்படத்தை திரையரங்கில் கொண்டாட ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

சம்பளம்

ஒவ்வொரு முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்கள் வெளியாகும்போது, அந்த படத்தில் பணியாற்றிய பிரபலங்களின் சம்பளம் குறித்த விவரம் வெளிவரும். அந்த வகையில், இப்படத்தில் நடித்த சூர்யா மற்றும் மமிதா பைஜூவின் சம்பள விவரம் வெளியாகியுள்ளது.

விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தில் நடிக்க சூர்யா மற்றும் மமிதா பைஜூ வாங்கிய சம்பளம்.. | Suriya Mamitha Baiju Salary Vishwanath And Sons

இந்நிலையில், விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தில் நடிக்க நடிகர் சூர்யாவிற்கு ரூ. 60 கோடி முதல் ரூ. 70 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளார். மேலும், கதாநாயகி மமிதா பைஜூ ரூ. 2 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என தகவல் கூறப்படுகிறது.

ஆனால், இந்த சம்பள விவரம் அதிகாரப்பூர்வமானது அல்ல, இணையத்தில் உலாவரும் தகவல் என்பது குறிப்பிடத்தக்கது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *