Brand New Day முதல் நாளில் இந்தியாவில் மட்டுமே செய்துள்ள வசூல்

Spider-Man
ஹாலிவுட் படங்களான ஹாரி பாட்டர், ஸ்பைடர் மேன், கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய படங்கள் போன்றவற்றிற்கு இந்திய மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும்.
சமீபத்தில் வெளியான கிறிஸ்டோபர் நோலனின் தி ஓடிசி படத்திற்கு பெரிய அளவில் மக்கள் ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.
இந்த நிலையில் ஸ்பைடர் மேன் பிராண்ட் நியூ டே என்ற திரைப்படம் அண்மையில் வெளியாகியுள்ளது.
கொலம்பியா ஃபிக்சர்ஸ் தயாரிப்பில் டெஸ்டின் டேனியல் கிரிட்டோன் இயக்கத்தில் உருவான ஸ்பைடர் மேன் பிராண்ட் நியூ டே திரைப்படம் உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது.
நாயகனாக டாம் ஹாலண்டும் நாயகியாக ஜெண்டயாவும் நடித்துள்ளனர். ஸ்பைடர் மேன் கதை என்பதால் பெரியவர்களை தாண்டி குழந்தைகளும் ஆர்வமாக திரையரங்கு சென்று படம் பார்த்து வருகிறார்கள்.
பாக்ஸ் ஆபிஸ்
இந்தியாவில் ஸ்பைடர் மேன் படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே வருகிறது. அதாவது டிக்கெட் புக்கிங் விற்பனை அமோகமாக நடக்கிறதாம்.
முதல் நாளில் இந்தியாவில் மட்டுமே இப்படம் ரூ. 80 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.






