பாக்ஸ் ஆபிஸில் தடுமாறும் ஜனநாயகன்.. ஏமாற்றம் தந்த வசூல்

பாக்ஸ் ஆபிஸில் தடுமாறும் ஜனநாயகன்.. ஏமாற்றம் தந்த வசூல்

ஜனநாயகன்

விஜய் நடித்து ஒரு திரைப்படம் வெளியாகிறது என்றால், அந்த படம் பட்டிதொட்டி எங்கும் அமோக வரவேற்பை பெற்று மாபெரும் அளவில் வசூலை வாரிக்குவிக்கும். அதுவே அவருடைய கடைசி படம் என்றால் சொல்லவே தேவையில்லை.

பாக்ஸ் ஆபிஸில் தடுமாறும் ஜனநாயகன்.. ஏமாற்றம் தந்த வசூல் | Jananayagan Movie Overseas Box Office

அப்படி மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் பல தடைகளை தாண்டி கடந்த 23-ஆம் தேதி திரைக்கு வந்த படம்தான் ஜனநாயகன். கலவையான விமர்சனங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், ரசிகர்கள் இப்படத்தை மிகவும் எமோஷனலாக பார்த்தனர். இவ்வளவு வருடங்களாக திரையில் நம்மை மகிழ்வித்த ஒரு ஹீரோ இனி சினிமாவில் இல்லை என்பதே அவர்களுடைய எமோஷனுக்கு காரணமாக விளங்கியது.

பாக்ஸ் ஆபிஸில் தடுமாறும் ஜனநாயகன்.. ஏமாற்றம் தந்த வசூல் | Jananayagan Movie Overseas Box Office


ஜனநாயகன் திரைப்படம் உலகளவில் ரூ. 120 கோடியும், தமிழ்நாட்டில் ரூ. 48 கோடியும் 2 நாட்களில் வசூல் செய்துள்ளது. இதற்கு முன் வெளிவந்த விஜய் படத்தை ஒப்பிட்டால் இது சற்று குறைவுதான்.

வெளிநாட்டு வசூல்  



இந்த நிலையில், வெளிநாட்டில் ஜனநாயகன் திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 2 நாட்களில் வெளிநாட்டில் மட்டுமே ரூ. 40+ கோடி வசூலித்துள்ளது. இது ஜனநாயகன் திரைப்படத்திற்கு வெளிநாட்டில் கிடைத்துள்ள மிக மிக குறைவான வசூலாகும்.

பாக்ஸ் ஆபிஸில் தடுமாறும் ஜனநாயகன்.. ஏமாற்றம் தந்த வசூல் | Jananayagan Movie Overseas Box Office

படம் ஏற்கனவே இணையத்தில் லீக்காது இந்த வசூல் குறைவிற்கு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இனி வரும் நாட்களில் ஜனநாயகன் திரைப்படம் வெளிநாட்டு பாக்ஸ் ஆபிஸில் எவ்வளவு வசூல் செய்யப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *