இன்று முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ள ஜீ தமிழ் சீரியல்களின் நேரம்… எந்தெந்த தொடர்?

ஜீ தமிழ்
சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் இரண்டிற்குமே ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பஞ்சமே இல்லை.
டிஆர்பியை அதிகரிக்க என்னென்ன செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்துகொண்டே தான் இருக்கிறார்கள், ஆனாலும் சன்-விஜய் அளவிற்கு இன்னும் ரீச் பெறவில்லை என்று தான் கூற வேண்டும்.
இதில் சமீபத்தில் தொடங்கப்பட்ட டான்ஸ் ஜோடி டான்ஸ் ஷோவிற்கு புதிய நடுவர்களாக பிரசாந்த் மற்றும் சிம்ரன் களமிறங்க மக்களிடம் கொஞ்சம் அதிகம் கவனம் பெற்றுள்ளது. அதேபோல் சரிகமப பாடல் நிகழ்ச்சிக்கும் ரசிகர்களிடம் நல்ல மவுசு உள்ளது.
மாற்றம்
இந்த நேரத்தில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இன்று முதல் ( ஜுலை 14) சில சீரியல்களின் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அப்படி எந்தெந்த தொடர்களின் நேரம் மாற்றம் என்பதை இப்போது காண்போம்.
வீரா- 6 மணிக்கு, பாரிஜாதம்- 6.30 மணிக்கு, சாமந்தி- 8 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாம்.






