Love oh Love திரை விமர்சனம்

தனுஷ் அறிமுகப்படுத்திய பவிஷ், நாக துர்கா, செல்வராகவன் நடிப்பில் மகேஷ் ராஜேந்திரன் இயக்கத்தில் வெளிவந்துள்ள இந்த லவ் ஓ லவ் இளைஞர்களை கவர்ந்ததா? பார்ப்போம்.
கதைக்களம்
ஹீரோ பவிஷ் படத்தின் ஆரம்பத்திலேயே ஒரு பெண்ணை காதலித்து ஏமாற்றிவிட்டு துபாய் தப்பி செல்வதாக போலிஸ் ஆபிசர் செல்வராகவன் பவிஷை கைது செய்து வைக்க, அங்க வந்த மாதர் சங்கம் பவிஷுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என போராட, பவிஷ் தன் கதையை செல்வராகவனிடம் சொல்கிறார்.
பவிஷ், நாக துர்காவை பார்த்துவுடன் காதல் அவருகாக என்ன வேண்டும்னாலும் செய்யலாம் என காதலித்து வருகிறார். நாக துர்காவோ பவிஷ் தகுதிக்கு மீறி செலவு வைக்கிறார். அவரும் கடன் வாங்கி தன் ஆசை காதலிகாக செலவு செய்கிறார். கடன்காரராகவும் மாறுகிறார்.
ஒரு கட்டத்தில் நாக துர்கா ஒரு சில காரணத்தால் உடனே திருமணம் செய்ய வேண்டும் என சொல்ல, அதற்குள் நாக துர்கா அம்மா வந்து பவிஷ் ஒரு கடன்காரர் இவர் எப்படி என் பெண்ணை பார்த்துகொள்வார் என பவிஷ் அப்பா கே எஸ் ரவிகுமார் போலிஸ் ஸ்டேஷனில் எல்லோர் முன்னிலையும் அசிங்கப்படுத்துகிறார்.
இதனால் மனமுடைந்து கே எஸ் ரவிகுமார் மற்றும் குடும்பமே பவிஷ் மீது கோபம் கொள்ள, அதே நேரத்தில் பவிஷ் வேலையும் போக, காதலால் தன் வாழ்க்கை சந்தோஷம் எல்லாம் போக, பவிஷ் வாழ்க்கை என்ன ஆனது, இவர்கள் காதல் என்ன ஆனது என்பதே மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
பவிஷ் நாம் திருவிளையாடல் ஆரம்பம் டைமில் பார்த்த தனுஷ் போலவே இருக்கிறார். அப்படியே தனுஷ் மேனரிசம் ஒரு சில இடங்களில் வாய்ஸ் கூட அவரை போலவே வந்து செல்கிறது, காதலிக்காக பர்ஸ் முழுவதும் கரைந்து, குடும்பம் சமூகம் என அசிங்கப்பட்டு அதிலிருந்து அவர் நாக துர்காவுக்கு போடும் கண்டிஷன் அப்போது அவர் செய்யும் சேட்டை என இந்த ஜென் தனுஷாகவே கண்முன் ஜொலிக்கிறார், சிறப்பாகவும் செய்துள்ளார்.
நாக துர்கா இரிட்டேட் செய்யும் ஹீரோயின் கேரக்டர் என்றே சொல்லி தான் கமிட் செய்திருப்பார்கள் போல, அதையும அவர் நன்றாகவே செய்துள்ளார், இதை தாண்டி போலிஸாக வரும் செல்வராகவன், மாதர் சங்கம் வனிதா என ஒரு சில கதாபாத்திரங்கள் நன்றாக நடித்துள்ளனர்.
இந்த படம் காதல் மோதல் பிரிவு அதை தொடர்ந்து ஒரு ரிவெண்ச் என்பது போல் செல்கிறது, அதில் ஒரு சில இடங்கள் ரசிக்க வைத்தாலும் பல இடங்கள் சோதிக்கிறது தான். எந்த காலத்தில் இருக்கிறோம், இன்னும் பசங்களா காதலுகாக செலவு பண்றாங்க, பொண்ணுங்க செலவு வைக்கிறாங்க என்பது போல் 90ஸ் சினிமா வசனங்கள் வந்தால் பரவாயில்லை காட்சிகளும் அப்படியே உள்ளது.
அதோடு இந்த படத்தை ஜாலியாக கொண்டு செல்ல வேண்டும் என்று தான் முடிவு செய்துள்ளார்கள், அதே நேரத்தில் அங்கங்கே எமோஷ்னல் காட்சிகளையும் பவிஷ் குடும்பத்தை வைத்து முயற்சித்துள்ளார்கள், அது எதுமே ஒர்க் ஆகாதது படத்தின் பலவீனம், அதுனாலேயே நமக்கு பவிஷ் மேல் ஒரு அனுதாபமும் வரவில்லை.
இரண்டாம் பாதி தனக்கு நேர்ந்த சோதனை கொடுமை இழந்த பணம் எல்லாத்துக்கும் சேர்த்து நாக துர்காவை பழி வாங்க பவிஷ் செய்யும் விஷயமெல்லாம் கண்டிப்பாக 90,2000-ம் ஆண்டுகளில் எடுத்திருந்தால் கண்டிப்பாக விசில் பறந்து இருக்கும், ஆனால் இந்த காலத்தில் இப்படி ஒரு களம் அதிலும் ப்ளாக்கில் சரக்கு வாங்க வைக்கும் காட்சி எல்லாம் ஷப்பா விடுங்கப்பா என்ற நிலை உருவாகிறது.
டெக்னிக்கலாக படத்தின் ஒளிப்பதிவு செம கலர்புல்லாக உள்ளது, பாடல்கள் பிண்ணனி இசை எல்லாம் சத்தம் தான் அதிகம், வாடி செல்லகுட்டி ஆறுதல்.
படம் முழுவதும் ஜாதி பெருமை, வன்முறை செய்துவிட்டு ஜாதி வேண்டாம், வன்முறை வேண்டாம் என பேசுவது போல் படம் முழுவதும் இந்த பொண்ணுங்களே இப்படிதான் என பேசிவிட்டு கடைசியில் வழக்கம் போல் ஒவ்வொரு பொண்ணு சாமிடா ரேஞ்சில் காட்சி வைத்து வழக்கம் போல் நார்மலைஸ் செய்துள்ளனர்.
க்ளாப்ஸ்
படத்தின் ஒளிப்பதிவு
நடிகர்கள் நடிகைகள் பங்களிப்பு
பல்ப்ஸ்
இது ஜென் சி காதல் படமா இல்லை 90ஸ் காதல் படமா என்ற குழப்பம் படம் முழுவதுமே உள்ளது.
மொத்தத்தில் இந்த படத்தில் செல்வராகவன் ஒரு வசனம் சொல்வார், உங்க காதலுக்கு நடுவில் என்னை ஏண்டா மாட்டி விட்றீங்க என, அப்படிதான் இருந்தது.
Rating: 2/5






