சிறகுகள் சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய சீரியல்… இவர்தான் நாயகியா?

சன் டிவி
என்ன வேணும் எங்க கிட்ட எல்லாமே இருக்கு என சில கடைகள் விளம்பரம் செய்யும்.
அதேபோல சன் தொலைக்காட்சி உங்களுக்கு என்ன வேண்டும, ரியாலிட்டி ஷோவா, சீரியல்களா, புத்தம் புதிய படங்களா, அல்லது சில வருடங்கள் முன் வெளியான முன்னணி நடிகர்களின் படங்களா?
எது வேண்டும் நாங்கள் ஒளிபரப்புகிறோம் என எல்லா விஷயத்திலும் கெத்து காட்டி வருகிறார்கள்.
திடீர் திடீர் என நன்றாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல்களை முடிக்கிறார், அதேவேகத்தில் புதிய சீரியலையும் களமிறக்கி விடுகிறார்கள்.
சீரியல்
அப்படி கடந்த சில வாரங்களுக்கு முன் செல்லமே செல்லமே சீரியல் முடிவுக்கு வந்தது. அந்த சீரியல் முடிந்த கையோடு சிறகுகள் என்ற புதிய சீரியலின் புரொமோவை இறக்கினார்கள்.
அம்மாவை இழந்த ஒரு பெண் சித்தியால் அனுபவிக்கும் கொடுமைகளை கதை பேசும் என தெரிகிறது.
இந்த நிலையில் இன்னொரு புதிய சீரியல் குறித்த தகவல் வந்துள்ளது.
மகாலட்சமி சீரியல் புகழ் காவ்யா நாயகியாக நடிக்க சன் டிவியில் ஒரு புதிய தொடர் வரப்போகிறதாம். அந்த புதிய சீரியலை Aura Creations தயாரிக்கிறார்கள்.






