Dark திரை விமர்சனம்

Dark திரை விமர்சனம்


கல்யான் ஜெகன் இயக்கத்தில் அஜய் கார்த்தி, அர்ச்சனா நேத்ரன், நட்டி நடிப்பிப் திரில்லர் ஜானர் ரசிகர்களை குறிவைத்து வந்துள்ள இந்த டார்க் வந்த நோக்கம் நிறைவேறியதா? பார்ப்போம்.

Dark திரை விமர்சனம் | Dark Movie Review

கதைக்களம்

படத்தின் ஆரம்பத்திலேயே பாக்யராஜ் குடியிருக்கும் வீட்டில் இருக்கும் 3 இளைஞர்களில் ஒரு இளைஞர் இரண்டு பேரை கொன்றுவிட்டு, அவரும் நெருப்பு வைத்து எரித்துக்கொள்கிறார்.

அதை தொடர்ந்து பாக்யராஜும் அந்த வீட்டில் குடியிருக்க வந்த படத்தின் நாயகன் அஜய்-ம் அதே வீட்டில் இறந்துள்ளனர்.

Dark திரை விமர்சனம் | Dark Movie Review

இந்த கேஸை விசாரிக்க நட்டி(நட்ராஜ்) வர, அப்போது நாயகன் அஜய் திடிரென எந்திரித்து பாலசந்தர் போயிருங்க இங்கிருந்து என சொல்லிவிட்டு கீழே விழ, பிறகு தான் தெரிகிறது அவர் இறக்கவில்லை என.
 

இதை தொடர்ந்து நட்டி இந்த கேஸில் தீவிர ஆர்வம் காட்ட, ஏன் இந்த வீட்டில் மட்டும் இப்படி நடக்கிறது, இந்த இறப்பிற்கு எல்லாம் என்ன காரணம் என்ற மர்ம முடிச்சே இப்படத்தின் இரண்டாம் பாதி.

Dark திரை விமர்சனம் | Dark Movie Review

படத்தை பற்றிய அலசல்


படத்தில் நடித்த அஜய், நட்டி, பாக்யராஜ் என எல்லோருமே தங்களின் பங்கை சிறப்பாக செய்துள்ளனர், அறிமுக நடிகர் அஜய்க்கு நல்ல அறிமுக கதாபாத்திரம் தான்.



படத்தின் மிகப்பெரிய பலம் கடைசி வரை ஒரு பதட்டத்தை படம் முழுவதுமே வைத்திருந்தது தான், அந்த பதட்டம் படத்தை வேறு எங்கும் நகர விடாமல் வைத்திருக்கிறது.

Dark திரை விமர்சனம் | Dark Movie Review



மேலும் ஒரு பெண்ணை காட்டியதும் காதல், பாடல் என கதை திசை மாறமல் கடைசி வரை சொல்ல வந்த விஷயத்துல் மட்டுமே களத்தை கொண்டு சென்றது இயக்குன கல்யாண் ஜெகனுக்கு பாராட்டுகள்.


படத்தின் முதல் பாதியில் இருந்த திரில், பதட்டம் இரண்டாம் பாதியில் கொஞ்சம் குறைவானாலும் கிளைமேக்ஸ் முடித்த விதம் நன்று.

Dark திரை விமர்சனம் | Dark Movie Review

டெக்னிக்கலாக ஒளிப்பதிவு, பின்னணி இசை ஒரு ஹாரர் படத்திற்கு இணையான சிறந்த அனவத்தை தருகிறது.

க்ளாப்ஸ்


படத்தின் களம்


டெக்னிக்கல் ஒர்க்


கிளைமேக்ஸ்



பல்ப்ஸ்


இன்னும் சொல்ல வந்த விஷயத்தை தெளிவாக சொல்லியிருக்கலான்.


வசனம் கொஞ்சம் நாடகத்தன்மையாக உள்ளது.


மொத்தத்தில் டார்க் கண்டிப்பாக திரில்லர் விரும்பிகள் ஒருமுறை பார்க்கலாம்.

Dark திரை விமர்சனம் | Dark Movie Review


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *