பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ரசிகர்களுக்கு வந்து குட் நியூஸ்… என்ன தெரியுமா?

பாண்டியன் ஸ்டோர்ஸ்
விஜய் தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் விரைவில் பரபரப்பான கதைக்களம் வரப்போகிறது.
மயிலின் தங்கை சுடரை பெண் கேட்டு சக்திவேல் அவர்களது வீட்டிற்கு சென்றுள்ளார். பணக்கார சம்பந்தமாச்சே மயில் அம்மா எப்படி வேண்டாம் என்று கூறுவார், நீங்களே பெண் கேட்கிறீர்கள் எங்களுக்கு சம்மதம் என்கிறார்.
இந்த விஷயம் மயிலுக்கு தெரிந்தால் என்ன கூறுவாரோ தெரியவில்லை. இன்னொரு பக்கம் செந்தில் லஞ்சம் வாங்கியது தாங்க முடியாமல் சாப்பிடாமல், தூங்காமல் கஷ்டப்படுகிறார் மீனா. சாப்பிடாமல் இருந்ததில் மயக்கம் வந்து இப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் எப்போது செந்தில் லஞ்சம் வாங்கிய விஷயத்தை வெளியே சொல்லப்போகிறாரோ தெரியவில்லை.
குட் நியூஸ்
2ம் பாகம் மிகவும் பரபரப்பான கதைக்களத்துடன் சென்றுகொண்டிருக்கும் நிலையில் முதல் பாகம் பற்றி ஒரு குட் நியூஸ் வந்துள்ளது.
அதாவது பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் பாகம் Neelam Productions தயாரிப்பில் கன்னடத்தில் ரீமேக் ஆக உள்ளதாம். இதில் முக்கிய கதாபாத்திரத்தில் திவ்யா ஸ்ரீதர் நடிக்கிறாராம்.






