வீரனே வா.. டாப் குக் டூப் குக் புகழ் வாகீசன் பாடிய “போராட்டம்” பட பாடல்

ஐபிசி தமிழ் புரொடக்ஷன்ஸ் பாஸ்கரன் கந்தையா தயாரிப்பில் உருவாகி வருகிறது போராட்டம் திரைப்படம்.
ரீகன் கந்தையா ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தை ராஜ் சிவராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு பூவன் மதீசன் இசையமைக்கிறார்.
வீரனே வா
போராட்டம் படத்தின் அடுத்த சிங்கிள் பாடல் தற்போது வெளியாகி இருக்கிறது. சன் டிவியின் டாப் குக் டூப் குக் நிகழ்ச்சியில் பங்கேற்று தமிழ்நாட்டில் அதிகம் பிரபலமான வாகீசன் தான் இந்த பாடலை பாடி இருக்கிறார்.
ஊக்கம் அளிக்கும் வகையில் இந்த பாடலின் வரிகள் அமைந்து இருக்கிறது. பாடல் இதோ.






