முதலமைச்சர் மகனை திருமணம் செய்துகொண்ட நடிகை.. 11 நாட்களில் இறந்த கணவர்! இவர் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா

திரையுலக நட்சத்திரங்களின் சொந்த வாழ்க்கையில் நடக்கும் சோகமான விஷயங்கள் ஏராளமாவை உள்ளன. அப்படி ஒருவர் தான் இந்த நடிகை.
லீனா சந்தவார்கர்
70ஸ், 80ஸ்-களில் பாலிவுட்டில் உச்ச நட்சத்திரமாக வலம் வந்தவர் லீனா சந்தவார்கர். கர்நாடகாவில் ராணுவ வீரர் குடும்பத்தில் பிறந்தவர் லீனா. இவர் கடந்த 1968-ஆம் ஆண்டு வெளியான ‘மா கா மீத்’ படத்தின் மூலமாக திரையுலகில் கால்பதித்தார். அப்போது முன்னணி நடிகர்களாக வலம் வந்த வினோத் கண்ணா, ராஜேஷ் கண்ணா, திலீப் குமார் ஆகியோருடன் தொடர்ந்து நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார் லீனா சந்தவார்கர்.
சினிமாவின் உச்சத்தில் இருக்கும்போது, நடிகை லீனாவிற்கும் சித்தார்த் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த சித்தார்த் என்பவர் கோவாவின் முதல் முதலமைச்சரான பந்தோட்கரின் மகன் ஆவார். இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். அப்போது நடிகை லீனாவிற்கு வயது 24. பல்வேறு கனவுகளுடன் திருமண வாழ்க்கையில் லீனா அடியெடுத்து வைத்தார். ஆனால், காலம் அவருக்கு மிகப்பெரிய சோகத்தை பரிசளித்தது.
திருமணமான 11வது நாளில் லீனாவின் கணவர் சித்தார்த் உயிரிழந்தார். துப்பாக்கியை சுத்தம் செய்து கொண்டிருந்த வேளையில், எதிர்பாராத விதமாக துப்பாக்கி வெடித்தது. இதில் சித்தார்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். லீனாவும் தனது தாய் வீட்டிற்கு திருப்பினார். பழி எல்லாம் லீனா மீது விழுந்தது. லீனாவை பலரும் ராசியில்லாதவர் என தங்களது பேச்சால் வாட்டி எடுத்தனர்.
இரண்டாம் திருமணம்
இதன்பின், மீண்டும் சினிமாவிற்கு திரும்பினார் நடிகை லீனா. ஆனால், அவர் நடிப்பில் வெளிவந்த ‘பைராக்’ (Bairaag) எனும் திரைப்படம் மிகப்பெரிய தோல்வியடைந்தது. அந்த சமயத்தில் நடிகை லீனாவிற்கும் நடிகர் கிஷோர் குமாருக்கும் பழக்கம் ஏற்பட்டது.
நடிகர் கிஷோர் குமார் லீனாவை விட 20 வயது மூத்தவர் ஆவார்.
3 முறை அவருக்கு விவாகரத்து ஆகியுள்ளது. இதனால் இந்த திருமணத்திற்கு அவரது வீட்டார் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். திருமணமான 7 ஆண்டுகளில் கிஷோர் குமாரும் இறந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.






