என்னை விஷம் கொடுத்து கொன்னுடுங்க.. முன்னாள் மனைவி பிரச்சனை! வீரம் பட நடிகர் பாலா கண்ணீர்

என்னை விஷம் கொடுத்து கொன்னுடுங்க.. முன்னாள் மனைவி பிரச்சனை! வீரம் பட நடிகர் பாலா கண்ணீர்


அஜித்தின் வீரம் படத்தில் அவரது நான்கு தம்பிகளில் ஒருவராக நடித்தவர் பாலா. இயக்குனர் சிறுத்தை சிவாவின் தம்பி தான் அவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாலாவுக்கு 2010ல் அம்ரிதா என்ற பாடகி உடன் திருமணம் நடந்தது. அவர்கள் 2019ல் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். அவர்களுக்கு ஒரு மகளும் இருக்கிறார்.

தற்போது கோகிலா என்பவரை திருமணம் செய்துகொண்டு பாலா வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் தான் முதல் மனைவியால் அவருக்கு பிரச்சனை வந்திருக்கிறது.

என்னை விஷம் கொடுத்து கொன்னுடுங்க.. முன்னாள் மனைவி பிரச்சனை! வீரம் பட நடிகர் பாலா கண்ணீர் | Veeram Actor Bala Emotional On First Wife Issue

விஷம் வைத்து கொன்னுடுங்க

முதல் மனைவி தற்போது மீண்டும் பணம் கேட்டு தொந்தரவு செய்வதாக பாலா தற்போது கூறி இருக்கிறார். தன்னிடம் இருந்த 10 லட்சம் ரூபாயை மகள் பெயரில் FD போட்டுவிட்டேன் என்றும், தற்போது முன்னாள் மனைவி 120 கோடி ரூபாய் கேட்பதாகவும் கூறியுள்ளார்.

“எல்லா பிரச்சனைகளையும் நான் உள்ளேயே வைத்து இருக்கிறேன். இனி யாராவது பேசினால் நான் எல்லா உண்மைகளையும் பிரெஸ் மீட் வைத்து சொல்லிவிடுவின். உண்மை வெளிவரக்கூடாது என்றல் என்னையும் என் மனைவியையும் விஷம் வைத்து கொன்றுவிடுங்கள்” என கண்ணீருடன் பாலா கூறி இருக்கிறார். 




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *