விவாகரத்து காரணத்தை அறியும் நிலாவின் தந்தை! அடுத்து நடக்கப்போகும் விபரீதம்.. அய்யனார் துணை சீரியல் புரோமோ

விவாகரத்து காரணத்தை அறியும் நிலாவின் தந்தை! அடுத்து நடக்கப்போகும் விபரீதம்.. அய்யனார் துணை சீரியல் புரோமோ

அய்யனார் துணை

விவாகரத்துக்கு பின் சோழனுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுத்தார் நிலா. இந்த 6 மாதத்தில் பொய் சொல்லாமல், எந்த ஒரு பித்தலாட்டமும் செய்யாமல் இருந்தால், சேர்ந்து வாழ்வது குறித்து யோசிக்கலாம் என்றார்.

விவாகரத்து காரணத்தை அறியும் நிலாவின் தந்தை! அடுத்து நடக்கப்போகும் விபரீதம்.. அய்யனார் துணை சீரியல் புரோமோ | Ayyanar Thunai Serial Next Week Promo

ஆனால், அதற்குள் சோழனுக்கும் நிலாவுக்கும் விவாகரத்து ஆன விஷயத்தை நிலாவின் பெற்றோர் தெரிந்துகொண்டனர். இதன்பின் அய்யனார் துணை வீட்டிற்கு வந்து நிலாவை தங்களுடன் அழைத்து சென்றுவிட்டனர். ஆனால், சென்னையில் நிலாவிற்கு வேலை இருப்பதால் திருவண்ணாமலைக்கு செல்லாமல் சென்னையிலேயே தங்கிவிட்டனர்.

புரோமோ வீடியோ



இந்த நிலையில், வரும் வாரத்திற்கான புரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இதில், சோழன், நடேசன், பல்லவன், சேரன், பாண்டியன் என ஒவ்வொருவரும் வந்து நிலாவை பார்க்கின்றனர். இது நிலாவின் அம்மா, அப்பாவிற்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

விவாகரத்து காரணத்தை அறியும் நிலாவின் தந்தை! அடுத்து நடக்கப்போகும் விபரீதம்.. அய்யனார் துணை சீரியல் புரோமோ | Ayyanar Thunai Serial Next Week Promo



பின், நிலா வீட்டிலிருந்து சேரன் கிளம்பும்போது அவரை விடுவதற்காக நிலாவின் தந்தை காரில் அழைத்து செல்கிறார். அப்போது, நிலாவுக்கும் சோழனுக்கும் ஏன் விவாகரத்து ஆனது என்பது குறித்து கேள்வி கேட்க, நிலா சோழனை காதலிக்கவில்லை, ஏமாற்றி திருமணம் செய்துகொண்டார் என்கிற உண்மை நிலாவின் தந்தைக்கு தெரியவருகிறது.

இந்த உண்மை அவருக்கு தெரியவந்த நிலையில், இதன்பின் நடக்கப்போகும் விபரீதம் என்ன என்பதை வரும் நாட்களில் பொறுத்திருந்து பார்ப்போம்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *