பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்திறகு ரகசியமாக திருமணம் நடந்துவிட்டதா?… வைரலாகும் போட்டோ

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்திறகு ரகசியமாக திருமணம் நடந்துவிட்டதா?… வைரலாகும் போட்டோ


கங்கனா ரனாவத்

சினிமா பின்னணி இல்லாமல் நடிக்க வந்து சினிமாவில் பெரிய இடத்தை பிடித்தவர் தான் நடிகை கங்கனா ரனாவத்.

23 வயதிலேயே தனது முதல் தேசிய விருதை பெற்றார். 39 வயதாகும் கங்கனா இதுவரை 4 தேசிய விருதுகள் வாங்கியிருக்கிறார்.


2006ம் ஆண்டு ஹிந்தியில் வெளியான கேங்ஸ்டர் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் தொடர்ந்து வாவ் லம்ஹா, லைஃப் இன் எ மெட்ரோ என பல படங்கள் நடித்தார்.

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்திறகு ரகசியமாக திருமணம் நடந்துவிட்டதா?... வைரலாகும் போட்டோ | Is Kangana Ranaut Married Secretly Photo Viral

2008ம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தார். 

கடைசியாக தமிழில் கங்கனா நடிப்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமான தலைவி படத்தில் நடித்தார், அதோடு சந்திரமுகி 2 படத்திலும் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.
சினிமா மட்டுமில்லாது அரசியலிலும் அதிகமாக தனது ஈடுபாட்டை காட்டி வருகிறார்.

திருமணம்

இந்த நிலையில் சமீபத்தில் நடிகை கங்கனா ரனாவத் கழுத்தில் தாலியுடன் வலம்வர பரபரப்பு கிளம்பிவிட்டது. அதாவது நடிகை கங்கனா ரனாவத்திற்கு ரகசிய திருமணம் நடந்துவிட்டது என சமூக வலைதளங்களில் பேசப்படுகிறது.

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்திறகு ரகசியமாக திருமணம் நடந்துவிட்டதா?... வைரலாகும் போட்டோ | Is Kangana Ranaut Married Secretly Photo Viral

ஆனால் அது நிஜ வாழ்க்கையில் நடந்த திருமணம் தாலி இல்லையாம். Queen 2 படத்தின் கதாபாத்திர லுக்கிற்காக கங்கனா திருமணக் கோலத்தில் தோன்றியதாக தகவல் வெளியாகியுள்ளது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *