கடைசி அந்த 10 நிமிடம், சூர்யாவின் கருப்பு படம் குறித்து ஜோதிகா நெகிழ்ச்சி பேட்டி…

கடைசி அந்த 10 நிமிடம், சூர்யாவின் கருப்பு படம் குறித்து ஜோதிகா நெகிழ்ச்சி பேட்டி…


கருப்பு படம்

ஆர்.ஜே.பாலாஜி, தமிழ் சினிமாவில் தனது சொந்த உழைப்பின் மூலம் மக்களின் பேராதரவை பெற்றுவரும் பிரபலம்.

வானொலியில் பணியாற்றியவர் அப்படியே சினிமா பக்கம் வந்து காமெடி நடிகராக நடித்து வந்தார். சரி நடிப்பு டிராக் இருக்கட்டும் என இயக்குனர் அவதாரம் எடுத்தார்.

கடைசி அந்த 10 நிமிடம், சூர்யாவின் கருப்பு படம் குறித்து ஜோதிகா நெகிழ்ச்சி பேட்டி... | Jyothika About Suriya Karuppu Movie

மூக்குத்தி அம்மன் படத்தின் மூலம் கவனம் பெற்ற ஆர்.ஜே.பாலாஜி இப்போது சூர்யாவை வைத்து கருப்பு என்ற படத்தை இயக்கியுள்ளார்.

த்ரிஷா, இந்திரன்ஸ், நட்டி, ஆர்.ஜே.பாலாஜி என பலர் நடித்துள்ள இப்படம் கடந்த மே 15ம் தேதி பெரிய எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையில் வெளியானது.

ஜோதிகா பேட்டி

படத்தை ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாடுகிறார்கள், படம் சூர்யாவுக்கு கம்பேக் கொடுத்திருப்பதாக அவரது ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தான் நடித்துள்ள சிஸ்டம் பட புரொமோஷன் நிகழ்ச்சியில் நடிகை ஜோதிகா கருப்பு படம் குறித்து பேசியுள்ளார். அதில் அவர், கருப்பு படத்தின் கடைசி 10 நிமிடங்கள் சூர்யா உண்மையிலேயே மிக பிரமாதமாக நடித்திருந்தார்.

கடைசி அந்த 10 நிமிடம், சூர்யாவின் கருப்பு படம் குறித்து ஜோதிகா நெகிழ்ச்சி பேட்டி... | Jyothika About Suriya Karuppu Movie

எங்களுக்குக் கிடைக்கும் இந்த அன்பைப் பார்த்து நாங்கள் மிகவும் நெகிழ்ந்து போயிருக்கிறோம், மகிழ்ச்சியாகவும் இருக்கிறோம். உண்மையில் வீட்டில் ஒரே கொண்டாட்டமாக இருக்கிறது என கூறியுள்ளார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *