வீட்டுப் பத்திரம் தர மீனாவிற்கு செக் வைத்த சிந்தாமணி, என்ன செய்யப்போகிறார்?… சிறகடிக்க ஆசை சீரியல்

வீட்டுப் பத்திரம் தர மீனாவிற்கு செக் வைத்த சிந்தாமணி, என்ன செய்யப்போகிறார்?… சிறகடிக்க ஆசை சீரியல்


சிறகடிக்க ஆசை

அதிகாரம் இருந்தால் இல்லை பணம் இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும் என்பதை பல சீரியல்கள் காட்டியுள்ளது.

அப்படி பணத்தை வைத்து ஒரு குடும்பத்தை ஆட்டிவைக்க முடியும் என்ற கதைக்களம் தான் இப்போது சிறகடிக்க ஆசை சீரியலில் ஒளிபரப்பாகி வருகிறது. நட்பாக பழகி பணத்தை கொடுத்து ஏமாற்றி இப்போது அந்த வீட்டையே அடைய பல பிளான்கள் போட்டு வருகிறார் சிந்தாமணி.

முத்து-மீனா வருமான வரித்துறை அதிகாரியை வைத்து பைனான்சியரை மிரட்டியதில் தங்களது வீட்டுப் பிரச்சனைக்கு பின்னால் இருப்பது சிந்தாமணி மட்டுமே என்பதை தெரிந்துகொள்கிறார்கள்.

வீட்டுப் பத்திரம் தர மீனாவிற்கு செக் வைத்த சிந்தாமணி, என்ன செய்யப்போகிறார்?... சிறகடிக்க ஆசை சீரியல் | Siragadikka Aasai Serial May 19 Episode

எபிசோட்

சிந்தாமணி செய்த காரியத்தை கேள்விப்பட்டு கோபப்பட்ட முத்து-மீனா அவரை நேரில் சந்திக்கிறார்கள். பைனான்சியரை கையில் வைத்துக்கொண்டு தோழியாக பழகிய ஒருவரை இப்படி ஏமாற்றிவிட்டாயே என திட்டுகிறார்கள்.

அப்போது சிந்தாமணி, உங்களுக்கு வீட்டுப் பத்திரம் வேண்டும் என்றால் மீனா அவளின் பூ சங்கத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்கிறார். அப்படி மீனா பதவியில் இருந்து விலகினால் வீட்டுப் பத்திரம் கிடைக்கும் என்கிறார்.

வீட்டுப் பத்திரம் தர மீனாவிற்கு செக் வைத்த சிந்தாமணி, என்ன செய்யப்போகிறார்?... சிறகடிக்க ஆசை சீரியல் | Siragadikka Aasai Serial May 19 Episode

ஆனால் முத்து அதெல்லாம் முடியாது, உன்னிடம் இருந்து எப்படி பத்திரம் வாங்க வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும் என கிளம்பிவிடுகிறார்.

வீட்டிற்கு வந்து குடும்பத்தினரிடம் சிந்தாமணி சூழ்ச்சி குறித்து முத்து-மீனா கூற அனைவரும் ஷாக் ஆகிறார்கள். கடைசியில் மீனா பூ சங்கத்தி இருந்து வெளியேறுவது குறித்து பேச முத்து அப்படியெல்லாம் செய்யாதே என கண்டிஷனாக கூறுகிறார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *