ஜனனி செய்த காரியம், குணசேகரன் மீது வருத்தத்தில் ஈஸ்வரி… எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்

பெண்களை அடிமையாக்கி, அவர்களை எப்போதும் வீட்டிற்குள்ளேயே அடிமைப்படுத்தி வைக்க வேண்டும் என்ற ஆணாதிக்க எண்ணம் கொண்ட குணசேகரன் என்பவரின் கதையாகவே எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் நகர்ந்து வருகிறது.
யாரும் நினைத்து கூட பார்க்க முடியாத தவறுகளாக செய்து வருகிறார், ஆனால் அவருக்கு அதற்கான தண்டனையே கிடைக்காது. நியாயத்திற்காக போராடும் ஜனனி என்ற பெண்ணிற்கு மட்டும் வாழ்க்கை போராட்டமாகவே உள்ளது.
எப்போது அநியாயம் செய்பவர்களுக்கு தண்டனை கிடைக்கும், பெண்களுக்கு எப்போது நியாயம் கிடைக்கும் என தெரியவில்லை.
புரொமோ
இன்றைய எபிசோட் புரொமோவில், பந்தக்கால் நடுவதற்கான வேலைகள் நடக்கின்றன, ஆனால் குணசேகரன் வரவில்லை. அவர் வந்துவிடுவார் என்று தான் கூறுகிறீர்கள் ஆனால் அவர் வரவில்லை என ஈஸ்வரி கதிரிடம் கேள்வி கேட்டு வருத்தப்படுகிறார்.
இன்னொரு பக்கம் ஜனனி, பந்தக்கால் நட வீட்டிற்கு வருகிறார், ஈஸ்வரி மற்றும் வீட்டுப் பெண்கள் சந்தோஷப்பட பிரச்சனை வருகிறது என ஞானம் மற்றும் கதிர் கோபப்படுகிறார்கள்.
இதோ புதிய புரொமோ,






