9 நாட்களில் LiK திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

LiK
தமிழ் சினிமாவில் சென்சேஷனல் ஸ்டாராக கொண்டாடப்பட்டு வருகிறார் பிரதீப் ரங்கநாதன். இவர் நடிப்பில் வெளிவந்த லவ் டுடே, டிராகன், டியூட் ஆகிய மூன்று திரைப்படங்களும் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தன.
மூன்று திரைப்படங்களின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து பிரதீப் நடிப்பில் கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி வெளிவந்த திரைப்படம்தான் LiK. இப்படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்க, அனிருத் இசையமைத்திருந்தார்.
பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்
பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டிருந்த இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா, க்ரித்தி ஷெட்டி, சீமான், மாளவிகா, யோகி பாபு என பலரும் நடித்திருந்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த LiK திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
[OQN3XF ]
இந்நிலையில், LiK திரைப்படத்தின் 9 நாட்கள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 9 நாட்களில் உலகளவில் இப்படம் ரூ. 57.5 கோடி வசூல் செய்துள்ளது.






