விஜய்யின் ஜனநாயகன் பட முக்கியமான காட்சிகள் லீக் ஆனது…. ஷாக்கில் படக்குழு

ஜனநாயகன்
நடிகர் விஜய், தனது சினிமா பயணத்தை வெற்றிகரமாக நடத்தியவர் இப்போது அரசியல் பயணத்தில் கால் பதித்துவிட்டார்.
எல்லா விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்யும் விஜய், அரசியலில் என்ட்ரி கொடுத்துள்ள நேரத்தில் ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆனால் அது தேர்தலுக்கு முக்கிய விஷயமாக இருக்கும் என படத்தை ஜனவரி 9ம் தேதி ரிலீஸ் செய்ய பிளான் போட்டார்.
யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் எச்.வினோத் இயக்கிய ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா படு பிரம்மாண்டமாக மலேசியாவில் நடந்தது. அந்த நிகழ்ச்சி மூலமாகவும் விஜய் நிறைய சாதனைகளை நிகழ்த்தினார்.
ஷாக்கிங் தகவல்
படத்தை ஜனவரி 9ம் தேதி காணலாம் என ஆசை ஆசையாக இருந்த ரசிகர்கள் இப்போது வரை ஏமாற்றத்தை அனுபவிக்கிறார்கள்.
தணிக்கை குழுவினர் ஒவ்வொரு காரணம் கூறி படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க மறுத்து வருகின்றனர், இது முழுக்க முழுக்க அரசியல் தான் என விஜய் ரசிகர்கள் புலம்பிய வண்ணம் உள்ளனர்.
ஜனநாயகன் பிரச்சனை இருக்கட்டும், தேர்தலில் கவனம் செலுத்துவோம் என பரபரப்பான பிரச்சாரத்தில் இறங்கியுள்ளார் விஜய். தற்போது என்னவென்றால் ஜனநாயகன் படத்தில் இடம்பெறும் முக்கிய காட்சிகள் சமூக வலைதளங்களில் லீக் ஆகியுள்ளதாம்.
இந்த செய்தி படக்குழுவிற்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






