கயல் சீரியல் நடிகை தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை… அதிர்ச்சி செய்தி

கயல் சீரியல் நடிகை தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை… அதிர்ச்சி செய்தி

கயல் சீரியல்

சன் தொலைக்காட்சியில் தொடர் ஆரம்பித்த நாள் முதல் நம்பர் 1 இடத்தில் டிஆர்பியில் இருந்து வந்த தொடர் தான் கயல். தற்போது டாப் 5ல் இடம்பெற்று வருகிறது.

கதையில் ஆனந்தியின் திருமண ஏற்பாடுகள் தான் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது, அதில் என்னென்ன பிரச்சனை வரப்போகிறது என்பது தெரியவில்லை.

இந்த நேரத்தில் கயல் சீரியலில் நடித்த நடிகை தூக்குப்போட்டு இறந்துள்ள செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யார்

இலங்கையை பூர்வீகமாக கொண்டவர் நடிகை சுபாஷினி. இவர் சீரியல் மற்றும் படங்களில் நடிப்பதால் சென்னை போரூரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்துள்ளார். குறிப்பாக சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கயல் சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம்.

இவரது கணவர் பிப்பின் பெங்களூரில் வசித்து வர படப்பிடிப்பு காரணமாக இவர் சென்னையில் தங்கி இருக்கிறார்.நேற்று இரவு தனது கணவருடன் வீடியோ கால் பேசிய போது ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டார் என கூறப்படுகிறது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *