10 நாட்களில் ஹாப்பி ராஜ் படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

ஹாப்பி ராஜ்
அறிமுக இயக்குநர்களின் படைப்புகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் அறிமுக இயக்குனர் மரியா ராஜா இளஞ்செழியன் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் உருவாகி வெளிவந்துள்ள படம் ஹாப்பி ராஜ்.
இப்படத்தில் கௌரி பிரியா, ஜார்ஜ் மரியன், கீதா கைலாசம், மதுரை முத்து என பலரும் நடித்துள்ளனர். மேலும் பல வருடங்களாக சினிமாவில் இருந்து விலகி இருந்த நடிகர் அப்பாஸ், இப்படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.
வசூல்
கடந்த மார்ச் 27ஆம் தேதி வெளிவந்த இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும், ஓரளவு நல்ல வரவேற்பை பாக்ஸ் ஆபிஸில் பெற்றது. இந்த நிலையில், 10 நாட்களை கடந்திருக்கும் ஹாப்பி ராஜ் திரைப்படம் உலகளவில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, 10 நாட்களில் ஹாப்பி ராஜ் திரைப்படம் ரூ. 9 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படம் எவ்வளவு வசூல் செய்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.






