தனுஷ் என் அப்பா மாதிரி, அவர் நட்பை இழந்தது எனக்கு மிகப்பெரிய shame: விக்னேஷ் சிவன்

தனுஷ் என் அப்பா மாதிரி, அவர் நட்பை இழந்தது எனக்கு மிகப்பெரிய shame: விக்னேஷ் சிவன்


விக்னேஷ் சிவன், நயன்தாரா ஜோடி நடிகர் தனுஷ் உடன் சண்டை போட்டது எல்லோருக்கும் தெரிந்தது தான். அவர்கள் திருமண வீடியோவில் நானும் ரவுடி தான் பட வீடியோவை பயன்படுத்த தனுஷ் அனுமதி தரவில்லை. அது தொடர்பாக தனுஷ் பற்றி நயன்தாரா கடும் வார்த்தைகள் உடன் அறிக்கைகள் வெளியிட்டதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஒரு பேட்டியில் தனுஷ் பற்றி விக்னேஷ் சிவன் பேசி இருக்கிறார்.
 

அப்பா மாதிரி

தனுஷ் சாரை எனக்கு ரொம்ப பிடிக்கும். ஒரு நடிகர் என்பது மட்டுமல்லாமல், அவரை ஒரு பெரிய உயரத்தில் வைத்து தான் நான் பார்க்கிறேன். அவரது பிறந்தநாள் ஜூலை 28. அதே தேதி தான் என் அப்பா இறந்த நாள்.

அதனால் தனுஷ் சாரிடம் நான் என் அப்பாவை feel செய்கிறேன். அந்த அளவுக்கு அவர் மீது அன்பு இருக்கிறது.

தனுஷ் என் அப்பா மாதிரி, அவர் நட்பை இழந்தது எனக்கு மிகப்பெரிய shame: விக்னேஷ் சிவன் | Vignesh Shivan About Fight With Dhanush

அதன் பிறகு நமக்கே தெரியாமல் சிலருடன், புரிந்துகொள்ள முடியாத வகையில் situation அமைந்துவிடுகிறது. அது என்னுடைய மிகப்பெரிய இழப்பாக கருதுகிறேன். நல்ல உறவுடன் இருக்கும் ஒருவரை நாம் இழக்கிறோம் என்றால் அது பெரிய shame என நான் நினைக்கிறேன். எங்கேயோ தவறு நடந்திருக்கிறது.

நான் இங்கே இருக்கிறேன், எனக்கென ஒரு வாழ்க்கை இருக்கிறது என்றால் அதற்கு 100% தனுஷ் சார் ஒரு முக்கிய ஆள்.

VIP ஷூட்டிங் நேரத்தில் 2.5 வருடம் தனுஷ் சார் உடன் தான் நான் இருந்தேன். அவருடன் இனிமையான பல நினைவுகள் இருக்கிறது.

எப்படி சரி செய்ய முடியும்?

ஆனால் ஒருகட்டத்தில் எல்லாமே தவறாக போய்விட்டது. ஒரு விஷயத்தை நினைத்து என் வாழ்க்கையில் அதிகம் வருத்தப்படுகிறேன் என்றால் அது தனுஷ் சார் நட்பை இழந்தது தான்.

“ஒரு பிரச்சனை இருந்து இரண்டு பேர் பிரிந்தால் அதை சரி செய்ய முடியும். ஆனால் பிரச்சனையே இல்லாமல் பிரிந்தால் அதை எப்படி சரி செய்ய முடியும்” என விக்னேஷ் சிவன் கூறி இருக்கிறார்.  


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *