கழுத்து நிறைய நகை அணிந்து சீரியல் நடிகை ஷபானா எடுத்த போட்டோ ஷுட்

நடிகை ஷபானா
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த சீரியல் தான் செம்பருத்தி.
இந்த தொடரில் நாயகியாக நடித்ததன் மூலம் தமிழ் மக்களின் பேவரெட் சின்னத்திரை நடிகையாக வலம் வந்தவர் தான் ஷபானா. அந்த தொடருக்கு பிறகு சன் டிவி பக்கம் சென்றார், ஆனால் அந்த தொடரில் இருந்து பாதியிலேயே வெளியேறினார்.
அடுத்து விஜய் டிவி பக்கம் வந்தவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்குபெற்று வந்தார். இப்போது வெப் தொடர்கள் பல நடித்துக்கொண்டு வருகிறார்.






