அசையா சொத்து மட்டும் ரூ.405 கோடி.. நடிகர் விஜய் வேட்பு மனுவில் குறிப்பிட்ட முழு சொத்து மதிப்பு விவரம்

நடிகர் விஜய் வரும் சட்டமன்ற தேர்தலில் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்து இருக்கிறார். மேலும் பிரச்சாரத்தையும் இன்றே அதிரடியாக தொடங்கி இருக்கிறார் அவர்.
விஜய் தனது வேட்புமனுவில் தனது மொத்த சொத்து மதிப்பையும் குறிப்பிட்டு இருக்கிறார்.
ரூ.500 கோடிக்கும் மேல்..
தங்கம், வெள்ளி, வைரம், சொகுசு கார்கள் உட்பட தன்னிடம் இருக்கும் அசையும் சொத்துக்கள் அனைத்தையும் பட்டியலிட்டு இருக்கும் விஜய் அதன் மதிப்பு ரூபாய் 405 கோடி ரூபாய் என தெரிவித்துள்ளார்.
அசையா சொத்துக்கள் சுமார் 115 கோடி ரூபாய் மதிப்பில் தனக்கு சொந்தமாக இருப்பதாக விஜய் குறிப்பிட்டுள்ளார்.






