4 நாட்களில் துரந்தர் 2 படம் உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா?

துரந்தர் 2
கடந்த ஆண்டு இந்திய திரையுலகின் பிளாக்பஸ்டர் திரைப்படங்களில் ஒன்றாக துரந்தர் அமைந்தது. அதுமட்டுமின்றி 2025ஆம் ஆண்டு அதிக வசூல் செய்த படம் என்கிற சாதனையையும் படைத்தது.
துரந்தர் வெற்றியை தொடர்ந்து கிட்டதட்ட மூன்று மாதங்களில் துரந்தர் 2 வெளிவந்துள்ளது. மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான துரந்தர் 2 மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது.
பாக்ஸ் ஆபிஸ்
கலவையான விமர்சனங்கள் ஒரு பக்கம் இருந்தாலும் கூட, பாக்ஸ் ஆபிஸில் நாளுக்கு நாள் வசூல் அதிகரித்து கொண்டே இருக்கிறது.
இந்த நிலையில், 4 நாட்களில் உலகளவில் துரந்தர் 2 படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் இதுவரை ரூ. 690 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.






