துரந்தர் 2 படத்திற்காக ரன்வீர் சிங் மற்றும் சாரா அர்ஜுன் வாங்கிய சம்பளம்.. முழு விவரம் இதோ

துரந்தர் 2
பாலிவுட் திரையுலகில் பிரபலமான இயக்குநர்களில் ஒருவர் ஆதித்யா தார். இவர் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த துரந்தர் திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது.
இதன் வெற்றியை தொடர்ந்து துரந்தர் 2 படத்தின் மீது அதீத எதிர்பார்ப்பு உண்டானது. அத்தகைய எதிர்பார்ப்புடன் கடந்த 19ஆம் தேதி வெளிவந்த துரந்தர் 2 திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்திருந்தாலும், வசூலில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
சாரா – ரன்வீர் சம்பளம்
இப்படத்தில் கதாநாயகனாக ரன்வீர் சிங் மற்றும் கதாநாயகியாக சாரா அர்ஜுன் நடித்திருந்தனர். இந்த நிலையில், இப்படத்தில் நடித்ததற்காக ரன்வீர் சிங் மற்றும் சாரா அர்ஜுன் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, ரன்வீர் சிங் ரூ. 50 கோடியும், சாரா அர்ஜுன் ரூ. 1 கோடியும் சம்பளமாக வாங்கியுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.






