Ustaad Bhagat Singh திரை விமர்சனம்

Ustaad Bhagat Singh திரை விமர்சனம்


ஹரிஷ் சங்கர் இயக்கத்தில் பவன் கல்யாண் நடிப்பில் கப்பர் சிங் என்ற பிரமாண்ட வெற்றிக்கு பிறகு பல வருடம் கழித்து இணைந்திருக்கும் இந்த கூட்டணி, கப்பர் சிங் அளவிற்கு வெற்றியை கொடுத்ததா? பார்ப்போம். 

Ustaad Bhagat Singh திரை விமர்சனம் | Ustaad Bhagat Singh Movie Review

கதைக்களம்


பார்த்திபன் பல பேரை கொன்று CM பதவிக்கு வருகிறார். அதே நேரத்தில் பார்த்திபன் மகன் ஒரு காட்டில் போலிஸார் சிலர் கஞ்சாவை பறிமுதல் செய்ததை அறிந்து அதை வாங்க வருகிறார், வாங்க வந்த இடத்தில் ஒரு போலிஸை அவமானம் படுத்துகிறார்.



பிறகு ஹீரோ பவன் கல்யாண் மாஸ் Entry கொடுத்து, பார்த்திபன் மகனை தன் கஸ்டடியில் வைக்க, பார்த்திபன் தன் மகனை அடுத்த MLA ஆக்க வேண்டும் அவன் எங்கே என சல்லடை போட்டு தேடுகிறார்.

Ustaad Bhagat Singh திரை விமர்சனம் | Ustaad Bhagat Singh Movie Review

அதே நேரத்தில் ராஷி கண்ணா குடும்பத்தோடு பாரஸ்ட் ஏரியாவிற்கு வர, அங்கு அவரை பாதுக்காக்கும் வேலை பவனுக்கு வருகிறது. பவன் தான் தன் மகனை கடத்தி வைத்திருக்கிறான் என்பதை அறிந்து ராஷி கண்ணாவை கடத்துகிறது பார்த்திபன் வைத்த அடியாட்கள்.


ஆனால், பவன் கல்யாண் அந்த கூட்டத்தை எல்லாம் அடித்து நொறுக்க, ராஷி கண்ணா யார் இவர், ஏன் இப்படி இருக்கிறார், பார்த்திபனுக்கும் பவனுக்கும் என்ன முன் விரோதம் என்ற ப்ளாஷ்பேக் உடன் முடிவு என்பதே மீதிக்கதை.

Ustaad Bhagat Singh திரை விமர்சனம் | Ustaad Bhagat Singh Movie Review 

படத்தை பற்றிய அலசல்


இந்த படமே பவன் கல்யாண் தலையில் தான் சுமக்கிறது, ஒன் மேன் ஷோ தான், ஹரிஷ் சங்கர் பவன் ரசிகர்களுக்கு என்ன பிடிக்கும் என்ற ஹியூமர், ஆட்டம், பாட்டம், அனல் பறக்கும் ஆக்‌ஷன் என அனைத்தையும் காக்டெய்ல் போல் கொடுக்க, பவனும் அதில் குறையில்லாமல் விருந்து வைத்துள்ளார்.

இவரை தவிற படத்தில் கவனம் ஈர்ப்பது ஸ்ரீலீலா தான், இரண்டாம் பாதியில் அவர் வரும் காட்சிகள் அனைத்தும் கவரும்படி உள்ளது, அதிலும் பவனை இம்ப்ரஸ் செய்ய அவர் செய்யும் சேட்டைகள், பவனை பார்ப்பதற்கு பொய் சொல்லி பார்க்க வருவது என அவர் சம்மந்தப்பட்ட காட்சிகள் சூப்பர்.

படத்தின் முதல் பாதி பவன் யார் என்ற பில்டப் உடனே நகர்கிறது.

Ustaad Bhagat Singh திரை விமர்சனம் | Ustaad Bhagat Singh Movie Review

தெறி படத்தின் ரீமேக் ரைட்ஸை வாங்கிருப்பார்கள் போல, படத்தின் களம் அப்படி தான் செல்கிறது. ஆனால், திடிரென பவன் கல்யாண் NDA கூட்டணி போட்டு, துணை முதலமைச்சர் ஆனதும் கதையே மாறிவிட்டது போல.


ஆம், பவனுக்கும் பார்த்திபனுக்குமான மோதலாகவே தான் படம் செல்கிறது, அப்படியே சென்று இருந்தால் கண்டிப்பாக இந்த படம் ஒரு சூப்பர் கமர்ஷியல் விருந்தாக இருந்திருக்கும், இதில் ஜிகாதி, தீவிரவாதி, ஹிந்து தர்மத்தை காக்கும் ஹீரோ கதை சென்றது படு சொதப்பலாகவே அமைந்துள்ளது.

Ustaad Bhagat Singh திரை விமர்சனம் | Ustaad Bhagat Singh Movie Review

டெக்னிக்கலாக ஒளிப்பதிவு நன்றாக இருந்தது, தமன் OG படத்தில் மீதமிருந்த இசையை போட்டு எஸ்கேப் ஆகியுள்ளார். 

க்ளாப்ஸ்



பவன் கல்யான்

ஸ்ரீலீலா வரும் காட்சிகள்


சில பவன் கல்யாண் படங்களின் நாஸ்டாலஜி விஷயங்கள்



பல்ப்ஸ்



பார்த்து புளித்த போன திரைக்கதை




மொத்தத்தில் பவன் படத்தில் இரண்டு பேரை கட்டி போட்டு கதை சொல்வார், அந்த நிலைமை தான் ஆடியன்ஸுக்கும் ஒரு கட்டத்திற்கு மேல்.

Ustaad Bhagat Singh திரை விமர்சனம் | Ustaad Bhagat Singh Movie Review


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *