இதெல்லாம் இருந்தால்தான் திருமணம்.. வருங்கால கணவர் குறித்து பேசிய மீனாட்சி சவுத்ரி

மீனாட்சி சவுத்ரி
தெலுங்கில் வெளிவந்த ஹிட் The Second Case திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை மீனாட்சி சவுத்ரி.
இதை தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான கொலை படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
இதன்பின், சிங்கப்பூர் சலூன், விஜய்யின் தி கோட், லக்கி பாஸ்கர், சங்கராந்திகி வஸ்துனம் என தொடர் வெற்றிப்படங்களை கொடுத்தார். கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த Anaganaga Oka Raju படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது.
வருங்கால கணவர்
திரையுலக நட்சத்திரங்களின் பேட்டி அவ்வப்போது இணையத்தில் வைரலாகும். அந்த வகையில் தனது வருங்கால கணவரின் என்னென்னவெல்ல இருக்க வேண்டும் என்கிற கண்டிஷன் குறித்து நடிகை மீனாட்சி சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
இதில், “என்னை திருமணம் செய்யும் நபர் குறைந்தது 100 ஏக்கர் நிலம் வைத்திருக்க வேண்டும். சமையல் செய்ய தெரிந்திருக்க வேண்டும், துணி துவைக்கவும் தெரிந்திருக்க வேண்டும். மேலும், துணிகளை இஸ்திரி செய்யவும் தெரிந்திருக்க வேண்டும். வீட்டிலுள்ள அனைத்து வேலைகளையும் கவனிக்கவேண்டும்” என கூறியிருக்கிறார்.






