மூன்று முடிச்சு சீரியலில் ஹீரோவாக நடிக்கும் நியாஸ் கான் வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

மூன்று முடிச்சு சீரியலில் ஹீரோவாக நடிக்கும் நியாஸ் கான் வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

மூன்று முடிச்சு

சின்னத்திரையில் இன்றைய தேதியில் நம்பர் 1 சீரியலாக மூன்று முடிச்சு உள்ளது. இயக்குநர் நந்தன் சி. முத்தையா இயக்கி வரும் இந்த சீரியலுக்கு ஆர். குமரன் திரைக்கதை எழுதி வருகிறார். இந்த சீரியலில் ரசிகர்களின் மனம் கவர்ந்த சின்னத்திரை நாயகி சுவாதி கொண்டே கதாநாயகியாக நடிக்கிறார்.

மூன்று முடிச்சு சீரியலில் ஹீரோவாக நடிக்கும் நியாஸ் கான் வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா | Niyaz Khan Moondru Mudichu Serial Salary Details

இவர் இதற்கு முன் ஈரமான ரோஜாவே 2 சீரியலில் கதாநாயகியாக நடித்திருந்தார். அதுமட்டுமின்றி இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த் நடிப்பில் வெளிவந்த மெய்யழகன் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நியாஸ் கான் சம்பளம்



நடிகை சுவாதி கொண்டேவின் ஜோடியாகவும், மூன்று முடிச்சு சீரியலின் கதாநாயகனாகவும் நடித்து வருபவர் நியாஸ் கான். இவர் இதற்கு முன் புதுப்புது அர்த்தங்கள், சண்டக்கோழி ஆகிய சீரியல்களில் நடித்திருக்கிறார். ஆனால், மூன்று முடிச்சு சீரியல் இவருக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளது.

மூன்று முடிச்சு சீரியலில் ஹீரோவாக நடிக்கும் நியாஸ் கான் வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா | Niyaz Khan Moondru Mudichu Serial Salary Details

முன்னணி சின்னத்திரை நாயகனாக வலம் வரும் நடிகர் நியாஸ் கான், மூன்று முடிச்சு சீரியலில் நடிக்க ஒரு நாளைக்கு எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. மூன்று முடிச்சு சீரியலில் நடிக்க அவர் ஒரு நாளைக்கு ரூ. 14 ஆயிரம் சம்பளம் பெறுவதாக கூறுகின்றனர். ஆனால், இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *