வெளிநாட்டில் மூன்று நாட்களில் தாய் கிழவி படம் செய்துள்ள வசூல் சாதனை.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

தாய் கிழவி
முன்னணி ஹீரோவான சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகி கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் தாய் கிழவி. இப்படத்தை அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்க கதையின் நாயகியாக ராதிகா சரத்குமார் நடித்திருந்தார்.
இப்படம் வெளிவருவதற்கு முன்பு இருந்தே படம் பார்த்தவர்கள் சிறந்த விமர்சனங்களை கூறி வந்தனர். இது இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் நம்பிக்கையையும் வலுவாக்கியது. படம் வெளிவந்த பின் மக்கள் இப்படத்தை கொண்டாடி வருகின்றனர்.
வசூல்
கடந்த மூன்று நாட்களில் மட்டுமே உலகளவில் ரூ. 20+ கோடி வசூல் செய்துள்ளது. இதில் வெளிநாட்டில் மட்டுமே தாய் கிழவி திரைப்படம் ரூ. 5.5 கோடி வசூல் செய்துள்ளது. இதனை வெளிநாட்டு விநியோகஸ்தர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
Pinch yourself. This is real. Backed by unanimous audience love, #ThaaiKizhavi delivers a MIND-BLOWING $601K+ (₹5.5cr) overseas in its 3 days opening weekend 🤯🤯🤯❤️❤️
Numbers like these aren’t luck. At #AhimsaEntertainment, we don’t chase benchmarks — we set them 🙌… pic.twitter.com/dARmmWwegX
— Ahimsa Entertainment (@ahimsafilms) March 2, 2026
சேயோன்
இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகுமார் முருகேசன், சிவகார்த்திகேயனை ஹீரோவாக வைத்து சேயோன் என்கிற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை கமல் ஹாசன் தயாரிக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் அறிவிப்பு வீடியோ வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.






