சினிமாவில் என்ட்ரியாகும் பிக்பாஸ் புகழ் தாமரை… யாருடன் நடிக்கிறார் தெரியுமா?

பிக்பாஸ்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்கள் மூலம் எத்தனையோ கலைஞர்கள் தங்களது வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியை கண்டுள்ளனர்.
அப்படி பல கலைஞர்கள் வாழ்க்கையில் முன்னேற ஒரு சிறந்த நிகழ்ச்சியாக அமைந்துள்ளது பிக்பாஸ். ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சி குறித்த புரிதல் தமிழக மக்களிடம் இல்லை என்றாலும் இப்போது நன்றாக தெரிந்துகொண்டனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நன்கு விளையாடினால் மக்களிடம் போய் சேரலாம் என்ற எண்ணம் பலருக்கும் உள்ளது. அப்படி இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் எங்கோ ஒரு கிராமத்தில் வசித்து வந்த தாமரை என்பவர் மக்களுக்கு பரீட்சயமானவர் ஆனார்.
20 ஆண்டுகளுக்கு மேலாக நாட்டுப்புற கலைஞராக இருந்தவருக்கு பிக்பாஸ் பெரிய எதிர்க்காலத்தை தேடிக்கொடுத்துள்ளது என்றே கூறலாம்.
முதல் படம்
சீரியல்களில் நடித்துவந்த தாமரை இப்போது முதன்முறையாக படத்தில் நடித்துள்ளார், அதுவும் டாப் நடிகருக்கு மனைவியாக நடித்துள்ளார்.
மலையாள இயக்குனர் மாதவ் ரமாதாசன், சரத்குமார், இந்திரஜித் ஜெகன், தேவிகா சதீஷ், வையாபுரி என பலரை வைத்து ஆழி என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் நகைச்சுவை நடிகர் வையாபுரிக்கு ஜோடியாக தாமரை செல்வி நடித்துள்ளாராம்.
இப்படம் வரும் பிப்ரவரி 27ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாம்.






