நடிகை பூஜா ஹெக்டே அணிந்திருக்கும் இந்த வாட்ச்-ன் விலை எவ்வளவு தெரியுமா, இதோ பாருங்க

பூஜா ஹெக்டே
இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும்பவர் பூஜா ஹெக்டே. இவர் நடிப்பில் அடுத்ததாக ஜனநாயகன் படம் வெளிவரவிருக்கிறது. ரிவைசிங் கமிட்டிக்கு சென்றுள்ள இப்படத்திற்கு விரைவில் சென்சார் சான்றிதழ் கிடைத்துவிடும் என கூறப்படுகிறது. இதனால் இம்மாதம் இப்படம் வெளிவர அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றனர்.
சினிமா பிரபலங்களின் சொத்து மதிப்பு, சம்பள விவரம், அவர்களின் சொகுசு கார், அவர்கள் பயன்படுத்து ஹேண்ட்பேக், வாட்ச் போன்ற விஷயங்கள் குறித்து அவ்வப்போது தகவல் வெளியாகும்.
சமீபத்தில் நடிகை தமன்னா சொந்தமாக நகைக்கடை திறந்திருந்தார். இந்த திறப்பு விழாவிற்கு சமந்தா, காஜல் அகர்வால், பூஜா ஹெக்டே என பலரும் கலந்துகொண்டனர்.
பூஜா ஹெக்டே வாட்ச்
இந்த நிலையில், இதில் கலந்துகொண்ட நடிகை பூஜா ஹெக்டே தனது கையில் அணிந்திருந்த வாட்ச்-ன் விலை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. Rolex Date just 41 என்கிற வாட்ச்-ஐ தான் பூஜா ஹெக்டே அணிந்திருக்கிறார். இந்த வாட்ச்-ன் விலை ரூ. 21.5 லட்சம் என கூறப்படுகிறது.






