வித் லவ் நடிகர்களை வீட்டுக்கே அழைத்து பாராட்டிய ரஜினி.. வீடியோவை பாருங்க

ஒரு புது படம் வந்து ஹிட் ஆனால், அதை உடனே பார்த்து, அது தனக்கு பிடித்து இருந்தால் படக்குழுவை வீட்டிற்கே அழைத்து பாராட்டுகளை தெரிவிப்பவர் ரஜினி.
கடந்த பல வருடங்களாக ரஜினி இதை செய்து வருகிறார். தற்போது அவரது மகள் சௌந்தர்யா தயாரிப்பில் வித் லவ் என்ற படம் கடந்த வாரம் ரிலீஸ் ஆனது. டூரிஸ்ட் பேமிலி பட இயக்குனர் அபிஷன் இந்த படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.
வீட்டிற்கு அழைத்து பாராட்டிய ரஜினி
வித் லவ் படம் மூன்று நாட்களில் 11 கோடி ரூபாய் வசூலித்து இருக்கும் நிலையில் ரஜினி படக்குழுவை வீட்டிற்கு அழைத்து பாராட்டி இருக்கிறார்.
சூப்பர்ஸ்டார் ரஜினியை சந்தித்த தருணத்தை நெகிழ்ச்சியாக படக்குழு வெளியிட்டு இருக்கின்றனர்.






