"நானும் அவரும்.."- நடிகர் மம்முட்டிக்கு வாழ்த்து சொன்ன கமல்ஹாசன்

"நானும் அவரும்.."- நடிகர் மம்முட்டிக்கு வாழ்த்து சொன்ன கமல்ஹாசன்


சென்னை,

நடிகர் மம்முட்டிக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளதற்கு வாழ்த்து தெரிவித்து கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார். அதில்,

’நாங்கள் இருவரும் சேர்ந்து நடித்ததில்லை. ஆனால், நான் அவரையும் அவர் என்னையும் தூர இருந்து ரசித்தும் ஒருவருக்கொருவர் நேரடியாக விமர்சித்துக்கொண்டும் ஒரு ‘கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார்’ நட்பை நீண்ட நாட்களாகப் பேணி வருகிறோம். நாங்கள் இருவரும் இன்னும் கொஞ்சம் அதிகமாக நேரில் சந்தித்துக்கொண்டிருக்கலாமே என்று இப்போது தோன்றுகிறது’ என்று தெரிவித்திருக்கிறார்.

நாட்டின் உயரிய குடிமக்கள் விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள், பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்ம ஸ்ரீ என மூன்று பிரிவுகளாக வழங்கப்படுகின்றன. இந்நிலையில், இன்று இந்தியாவின் 77வது குடியரசுத் தினத்தை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சகம் 2026-ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் பட்டியலை நேற்று வெளியிட்டது.

கலை, இலக்கியம், சமூக சேவை, மருத்துவம், கல்வி, பொது சேவை போன்ற பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கும், பொதுவாழ்க்கையில் நீண்டகாலம் தாக்கத்தை ஏற்படுத்தியவர்களுக்கும் இந்த விருதுகள் வழங்கப்படுகிறது.

அதன்படி, சமீபத்தில் மறைந்த நடிகர் தர்மேந்திரா மற்றும் நடிகர் மம்முட்டி, நடிகர் மாதவன் ஆகியோருக்கு 2026ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

மறைந்த நடிகர் தர்மேந்திர சிங் தியோலுக்கு ‘பத்ம விபூஷண்’ விருதும், நடிகர் மாதவனுக்கு ‘பத்ம ஸ்ரீ’ விருதும், நடிகர் மம்முட்டிக்கு ‘பத்ம பூஷண்’ விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *