கடைசிநாள் படப்பிடிப்பு தளத்தில் எமோஷ்னல் ஆன அண்ணா சீரியல் நடிகர்கள்… வைரலாகும் போட்டோஸ்

அண்ணா சீரியல்
ஒரு சீரியல் ரீச் ஆவது என்பது நடிகர்களை தாண்டி கதை மூலம் தான்.
தமிழ் மக்கள் எப்போதுமே சென்டிமெண்டிற்கு நெருக்கமானவர்கள், அப்படிபட்டவர்களை கவரும் வண்ணம் அண்ணன்-தங்கைகளின் பாசத்தை உணர்த்தும் வகையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த சீரியல் தான் அண்ணா.
கடந்த 2023ம் ஆண்டு தொடங்கப்பட்டு வெற்றிநடை போட்டு வந்த அண்ணா சீரியலில் மிர்ச்சி செந்திலும், நித்யா ராமும் நடித்து வந்தார்கள்.
விறுவிறுப்பான கதைக்களத்துடன் சென்று கொண்டிருக்கும் இந்த சீரியல் பொங்கலோடு முடிவுக்கு வர உள்ளதாம். இதன் கிளைமாக்ஸ் எபிசோடு விரைவில் ஒளிபரப்பாக உள்ளது.
கடைசிநாள்
தற்போது ஜீ தமிழின் அண்ணா சீரியல் நடிகர்கள் கடைசி நாளின் படப்பிடிப்பு தளத்தில் எமோஷ்னலாக புகைப்படங்கள் எடுத்துள்ளனர்.
அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாக ரசிகர்கள் நாங்கள் உங்களை மிஸ் செய்வோம் என பதிவிட்டு வருகின்றனர்.






