பராசக்தி படத்தில் நடிக்க ஸ்ரீலீலா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா, இதோ பாருங்க

ஸ்ரீலீலா
நடனத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்து சென்சேஷனல் நாயகியாக தென்னிந்திய அளவில் பிரபலமானவர் ஸ்ரீலீலா.
இவர் தமிழில் எப்போது அறிமுகமானவர் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், பராசக்தி படம் இவருக்கு சிறப்பாக அறிமுகத்தை தமிழில் கொடுத்துள்ளது.
இதுவரை நடனத்திற்காக மட்டுமே பாராட்டுகளை பெற்று வந்த ஸ்ரீலீலா, முதல் முறையாக தனது நடிப்பிற்காகவும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்றுள்ளார்.
சம்பளம்
இந்த நிலையில், தனக்கு மாபெரும் வரவேற்பை பெற்று தந்துள்ள பராசக்தி படத்தில் நடித்ததற்காக ஸ்ரீலீலா ரூ. 1 கோடி சம்பளம் பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
பராசக்தி படத்தை தொடர்ந்து அடுத்ததாக, அஜித் நடிப்பில் உருவாகவுள்ள ஏகே 64 திரைப்படத்தில் ஸ்ரீலீலா கமிட்டாகியுள்ளார் என கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.






