விஜய்க்கு ஆதரவு தெரிவித்த ராகுல் காந்தி.. அவரே வெளியிட்ட பதிவு

ஜனநாயகன்
விஜய்யின் ஜனநாயகன் படம் ஜனவரி 9ஆம் தேதி வெளிவரவிருந்த நிலையில், தணிக்கை சான்றிதழ் பிரச்சனை காரணமாக ரிலீஸ் தள்ளிப்போய்விட்டது.
விஜய்யின் கடைசி படம் என்பதால் இப்படத்தை திரையரங்கில் கொண்டாட ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். அப்படி காத்திருந்த ரசிகர்களுக்கு படம் வெளிவராதது பெரிய ஏமாற்றத்தை தந்தது.
ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க வேண்டும் என படக்குழு நீதிமன்றத்தை நாடியது. சென்னை உயர் நீதிமன்றத்தில் தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட நிலையில், சென்சார் போர்ட் உடனடியாக அதனை மேல்முறையீடு செய்தது. இதனால் மீண்டும் பிரச்சனை தொடங்கியது.
அரசியல் ரீதியான சில காரணங்களால் தான் ஜனநாயகன் படத்தை ரிலீஸ் செய்யவிடாமல் தடுக்கிறார்கள் என விஜய் ரசிகர்கள் கூறி வருகிறார்கள். படத்தின் ரிலீஸ் தள்ளிப்போன நிலையில், திரையுலகை சேர்ந்த அஜய் ஞானமுத்து, சிலம்பரசன், ஜீவா, ஜெய், சாந்தனு, சிபிராஜ் என பலரும் தங்களது ஆதரவை விஜய்க்கு தெரிவித்து வந்தனர்.
ராகுல் காந்தி ஆதரவு
பல அரசியல் தலைவர்களும் தங்களது ஆதரவை தெரிவித்து வந்த நிலையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆதரவளித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த பதிவில், “ஜனநாயகன் படத்தை தடுக்கும் முயற்சி தமிழ் கலாச்சாரம் மீதான தாக்குதல். திரு மோடி அவர்களே, தமிழ் மக்களின் குரலை அடக்குவதில் உங்களால் ஒருபோதும் வெற்றிபெற முடியாது” என கூறி ஜனநாயகன் படத்திற்கும் விஜய்க்கும் தனது ஆதரவை தெரிவித்து இருக்கிறார்.
The I&B Ministry’s attempt to block ‘Jana Nayagan’ is an attack on Tamil culture.
Mr Modi, you will never succeed in suppressing the voice of the Tamil people.
— Rahul Gandhi (@RahulGandhi) January 13, 2026






