தமிழ்நாட்டில் பராசக்தி படம் இதுவரை செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

பராசக்தி
முன்னணி நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவி மோகன் முதல் முறையாக இணைந்து நடித்து உருவான படம் பராசக்தி.
இப்படத்தை இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியிருந்தார். அதர்வா, ஸ்ரீலீலா, பேசில் ஜோசப், ராணா ஆகியோர் இப்படத்தில் நடித்திருந்தனர்.
பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வெளிவந்த இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தாலும், மறுபுறம் கலவையான விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகிறது.
தமிழக வசூல்
இந்த நிலையில், பராசக்தி படம் தமிழ்நாட்டில் 2 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, தமிழ்நாட்டில் மட்டுமே இதுவரை இப்படம் ரூ. 24+ கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படம் எவ்வளவு வசூல் செய்யப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.






