திடீரென வழக்கு தொடர்ந்த கமல்.. எல்லாம் இதற்காக தான்?

திடீரென வழக்கு தொடர்ந்த கமல்.. எல்லாம் இதற்காக தான்?


 நடிகர் கமல் தற்போது சினிமா, அரசியல் என இரண்டிலும் பிசியாக பயணித்து வருகிறார். மேலும் ராஜ்கமல் நிறுவனம் மூலமாக பெரிய படங்களையும் தயாரித்து வருகிறார். அடுத்து சூப்பர்ஸ்டார் ரஜினி நடிக்கும் படத்தை கமல் தயாரிக்க இருக்கிறார்.

இந்நிலையில் நடிகர் கமல் தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்து இருக்கிறார்.

திடீரென வழக்கு தொடர்ந்த கமல்.. எல்லாம் இதற்காக தான்? | Kamalhaasan Files Case Protection Of Personality


பெயரை பயன்படுத்த தடை

தனது பெயரையும் புகைப்படத்தையும் வணிக ரீதியாக யாரும் பயன்படுத்த கூடாது என தடை கேட்டு வழக்கு தொடர்ந்து இருக்கிறார் கமல் ஹாசன்.

சென்னையில் ஒரு நிறுவனம் கமல்ஹாசனின் போட்டோ, உருவம், வசனங்கள் அகியவற்றை பயன்படுத்தி டி-சர்ட் அச்சடித்து விற்பனை செய்து வரும் நிலையில், அதை தடுக்க கமல் இப்படி வழக்கு தொடர்ந்து இருக்கிறார்.

மேலும் இதுபோல எதிர்காலத்தில் யாரும் செய்ய கூடாது என்பதற்காக தனது பெயர் போட்டோ மற்றும் குரல் ஆகியவற்றை பயன்படுத்த தடை கேட்கிறார் கமல்.

இப்படி செய்வது கமல் முதல் ஆள் இல்லை. ஹிந்தியில் அமிதாப் பச்சன், ஹ்ரித்திக் ரோஷன், ஐஸ்வர்யா ராய் தொடங்கி தெலுங்கில் பவன் கல்யாண், நாகர்ஜூனா வரை ஏராளமான பிரபலங்கள் இப்படி வழக்கு தொடர்ந்து protection of personality உத்தரவை வாங்கி இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

திடீரென வழக்கு தொடர்ந்த கமல்.. எல்லாம் இதற்காக தான்? | Kamalhaasan Files Case Protection Of Personality


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *