ரீரிலீஸ் ஆகும் குஜராத்தி கிளாசிக் ஹிட் படம்.. குஷியில் ரசிகர்கள்

பழைய படங்களை மறுஉருவாக்கம் செய்து, லேட்டஸ்ட் படங்களின் தரத்திற்கு இணையாக மாற்றி ரீரிலீஸ் செய்வது தான் லேட்டஸ்ட் ட்ரெண்ட். தமிழ் சினிமாவில் இப்படி எம்ஜிஆர் காலத்து படங்கள் தொடங்கி பல படங்கள் வருகின்றன.
அதே போல குஜராத்தியில் 1998ல் வந்த Desh Re Joya Dada Pardesh Joya என்ற படம் தற்போது மீண்டும் தரம் உயர்த்தப்பட்டு தற்போது ரீரிலீஸ் ஆகிறது. 1998லேயே அந்த படம் 22 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஜனவரி 9 ரீரிலீஸ்
Desh Re Joya Dada Pardesh Joya படம் வரும் ஜனவரி 9ம் தேதி ரீரிலீஸ் ஆக இருப்பதாக அறிவிப்பு வந்திருக்கிறது.
Ultra Media & Entertainment Group நிறுவனம் Ultra Rewind என்ற பெயரில் பழைய படங்களை இப்படி ரீரிலீஸ் செய்கின்றனர்.






