சேரன் காதலியிடம் தவறாக நடந்துகொள்ள நினைத்த ரவுடிகள்..

அய்யனார் துணை
விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் அய்யனார் துணை சீரியலில், அடுத்து நடக்கப்போவது குறித்து புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.
சேரனும் சந்தாவும் காதலிக்க தொடங்கிவிட்டனர். திருமணத்திற்கு முன் இருவரும் பேசி பழகவேண்டும் என முடிவு செய்துள்ளனர்.
சேரன் – சந்தா
இந்த நிலையில், முதல் முறையாக சந்தாவை வெளியே அழைத்து செல்கிறார் சேரன்.
இருவரும் ஜோடியாக கடற்கரைக்கு செல்கிறார்கள். அங்கு சந்தோஷமாக விளையாடிவிட்டு, சேரனின் தோளில் தலை சாய்த்து அமர்ந்திருக்கிறார் சந்தா.
அப்போது அங்கு வரும் சில ரௌடிகள் சந்தாவிடம் தவறாக நடந்துகொள்ள முயற்சிக்கிறார்கள். ஆனால், சேரன் அவர்களை தடுத்து நிறுத்துகிறார். இதன்பின் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.






