ஜனநாயகன் படத்தின் பட்ஜெட் மற்றும் பிசினஸ் ரிப்போர்ட்.. ரிலீஸுக்கு முன் இவ்வளவு கோடி லாபமா

தளபதி விஜய்யின் படங்கள் என்றாலே பிசினஸ் மிகப்பெரிய அளவில் நடக்கும். அதுவும் அவருடைய கடைசி படம் என்றால் சொல்லவே தேவையில்லை.
பெரிய திரைப்படங்கள் வெளிவரும் சமயத்தில், அப்படங்களின் பட்ஜெட் மற்றும் பிசினஸ் விவரங்களை பார்ப்போம். அந்த வகையில் விஜய்யின் ஜனநாயகன் படத்தின் பட்ஜெட் மற்றும் பிசினஸ் ரிப்போர்ட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
இதில் படத்திற்காக எவ்வளவு செலவு செய்யப்பட்டுள்ளது, ரிலீஸுக்கு முன் தயாரிப்பாளருக்கு எவ்வளவு லாபம் கிடைத்துள்ளது என்பதை பற்றி விலாவாரியாக பார்க்கலாம்.
ஜனநாயகம் படத்தின் பட்ஜெட் – ரூ. 352.60 கோடி
திரையரங்க உரிமை:
- தமிழ்நாடு திரையரங்க உரிமை – ரூ. 105 கோடி
- கேரளா திரையரங்க உரிமை – ரூ. 15 கோடி
- கர்நாடகா திரையரங்க உரிமை – தயாரிப்பாளர் கே.வி.என் சொந்த ரிலீஸ் (ஆனால், இப்படம் கர்நாடகாவில் ரூ. 20 கோடி ஷேர் கொடுக்கும் என கூறப்படுகிறது). அதை கணக்கில் எடுத்துக்கொள்வோம்.
- ஆந்திரா மற்றும் தெலுங்கானா திரையரங்க உரிமை – ரூ. 12 கோடி
வடஇந்தியா திரையரங்க உரிமை – ரூ. 9 கோடி
- வெளிநாட்டு திரையரங்க உரிமை – ரூ. 78 கோடி
உரிமை:
ஆடியோ உரிமை – ரூ. 29 கோடி
- டிஜிட்டல் உரிமை – ரூ. 120 கோடி
- சாட்டிலைட் உரிமை – ரூ. 64 கோடி
மொத்தம் இப்படத்தின் பிசினஸ் – ரூ. 452 கோடி
இதன்மூலம் ரிலீஸுக்கு முன் தயாரிப்பாளருக்கு கிடைத்துள்ள லாபம் – ரூ. 99.40 கோடி…
இந்த தகவலை பிரபல மூத்த பத்திரிகையாளர் ஒருவர் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.






